தமிழக கவர்னர் பெயரில் போலி இமெயில் கணக்கு; போலீசில் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னர் பெயரில் போலி இமெயில் கணக்கு; போலீசில் புகார்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (20)
Share
சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பெயரில் போலி இ-மெயில் கணக்கு உருவாக்கி தவறான கருத்துகள் பரப்பி வருவதாக கவர்னர் மாளிகை சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக கவர்னராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்தமாதம் (செப்.,) தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார்.
Tamil Nadu, Governor, Fake eMail, Lodges Complaint, Miscreants, தமிழகம், கவர்னர், ஆளுநர், போலி, இமெயில், கணக்குகள், போலீஸ், புகார்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பெயரில் போலி இ-மெயில் கணக்கு உருவாக்கி தவறான கருத்துகள் பரப்பி வருவதாக கவர்னர் மாளிகை சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக கவர்னராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்தமாதம் (செப்.,) தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் பெயரில் போலி இ-மெயில் கணக்கு உருவாக்கி தவறான கருத்துகள் பரப்பி வருவதாக கவர்னர் மாளிகை சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இதுதொடர்பாக தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‛கவர்னர் மாளிகை பெயரில் சில போலி மின்னஞ்சல்கள் உருவாக்கப்பட்டு தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இப்படியான போலி கணக்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். govtam@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியும் @rajbhavan_tn என்ற டுவிட்டர் கணக்குமே அதிகாரப்பூர்வமானவை,' என கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X