தொடர் தாக்குதல்: காஷ்மீரை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொடர் தாக்குதல்: காஷ்மீரை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (10)
Share
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என, பலரும் பலியாகி உள்ளனர்.

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.



latest tamil news



ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என, பலரும் பலியாகி உள்ளனர். குறிப்பாக, வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீருக்குள் வர அஞ்ச வேண்டும் என்பதற்காக, ஜம்மு - காஷ்மீரில் தங்கியிருந்து பணியாற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அச்சமடைந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன் திரும்பி வருகின்றனர்.


latest tamil news



இதுகுறித்து புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் கூறுகையில், 'ஜம்மு - காஷ்மீரின் சூழல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இங்கு குடும்பத்துடன் தங்கியிருந்து எங்களால் பணியாற்றவோ நிம்மதியாக வாழவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்புகிறோம்' என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X