14 வயது இரட்டை சகோதரர்கள் 25வது மாடியிலிருந்து விழுந்து பலி| Dinamalar

14 வயது இரட்டை சகோதரர்கள் 25வது மாடியிலிருந்து விழுந்து பலி

Added : அக் 18, 2021 | கருத்துகள் (9)
Share
காசியாபாத்: அடுக்குமாடிக் குடியிருப்பின் 25வது மாடியில் உள்ள தங்களது வீட்டில் இருந்து 14 வயது இரட்டை சகோரர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரட்டை
Twin Brothers, Fall, Death, 25th Floor, Ghaziabad, UP, இரட்டை சகோதரர்கள், மாடி, உயிரிழப்பு, காசியாபாத், உபி, உத்தரபிரதேசம்

காசியாபாத்: அடுக்குமாடிக் குடியிருப்பின் 25வது மாடியில் உள்ள தங்களது வீட்டில் இருந்து 14 வயது இரட்டை சகோரர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரட்டை மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சிறுவர்களின் தந்தை வேலை விஷயமாக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் குடியிருப்பின் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக சிறுவர்களின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். சிறுவர்கள் நள்ளிரவில் நிலாவை பார்க்க ஆசைப்பட்டு தவறி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X