இந்தியா- இலங்கை ராணுவ ‛மித்ர சக்தி 2021 கூட்டுப்பயிற்சி நிறைவு| Dinamalar

இந்தியா- இலங்கை ராணுவ ‛மித்ர சக்தி 2021' கூட்டுப்பயிற்சி நிறைவு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021
Share
கொழும்பு: இந்தியா- இலங்கை இடையேயான 'மித்ர சக்தி' என்றழைக்கப்படும் ராணுவ கூட்டுப்பயிற்சி அம்பாறையில் நிறைவடைந்தது.இந்தியா மற்றும் இலங்கை ராணுவங்களுக்கிடையேயான கூட்டுப்பயிற்சியின் 8-வது பதிவான ‛மித்ர சக்தி 2021‛ அக்டோபர் 4ம் தேதி முதல் 16ம் தேதி வரை அம்பாறை போர் பயிற்சி பள்ளியில் நடைபெற்று நிறைவடைந்தது.தாக்குதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்
INDIA, SRILANKA, MILITARY, TRAINING, இந்தியா, இலங்கை, ராணுவ, மித்ர சக்தி 2021,  கூட்டுப்பயிற்சி

கொழும்பு: இந்தியா- இலங்கை இடையேயான 'மித்ர சக்தி' என்றழைக்கப்படும் ராணுவ கூட்டுப்பயிற்சி அம்பாறையில் நிறைவடைந்தது.


latest tamil news


இந்தியா மற்றும் இலங்கை ராணுவங்களுக்கிடையேயான கூட்டுப்பயிற்சியின் 8-வது பதிவான ‛மித்ர சக்தி 2021‛ அக்டோபர் 4ம் தேதி முதல் 16ம் தேதி வரை அம்பாறை போர் பயிற்சி பள்ளியில் நடைபெற்று நிறைவடைந்தது.

தாக்குதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் அடிப்படையிலான மித்ர சக்தி, இலங்கை ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய இருதரப்பு கூட்டு பயிற்சியாகும். இந்தியா மற்றும் இலங்கையின் வளர்ந்து வரும் பாதுகாப்புக் கட்டமைப்பின் முக்கியப் பகுதியாக இது விளங்குகிறது. கடந்த 14 நாட்களாக நடைபெற்ற கூட்டு பயிற்சிகளின் போது, இரண்டு குழுக்களும் மிகுந்த உற்சாகத்தையும் தொழில் திறனையும் வெளிப்படுத்தின.


latest tamil news


பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியை இந்திய ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே மற்றும் இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பார்வையிட்டனர். ஆயுதப் படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு-செயல்பாட்டை ஊக்குவிப்பதைத் தவிர, இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தவும் மித்ர சக்தி உதவியது. பயிற்சியின் நிறைவில் இதில் பங்கேற்ற இந்திய, இலங்கை ராணுவ குழுவினருக்கு மிகுந்த திருப்தியை ஏற்படுத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X