பொது செய்தி

தமிழ்நாடு

அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: அசைவம் சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என பலரும் தயங்குவதால், அவர்களுக்காக வரும் சனிக்கிழமை (அக்.,23) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அசைவம் சாப்பிட்டால், மது அருந்தினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள
Covid Vaccine, Vaccination Camp, Health Minister, Tamilnadu, Ma Subramanian, கொரோனா, தடுப்பூசி, கோவிட், மெகா தடுப்பூசி முகாம், அமைச்சர், மா சுப்பிரமணியன், தமிழகம், அசைவ பிரியர்கள், சனிக்கிழமை

சென்னை: அசைவம் சாப்பிட்டால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என பலரும் தயங்குவதால், அவர்களுக்காக வரும் சனிக்கிழமை (அக்.,23) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
அசைவம் சாப்பிட்டால், மது அருந்தினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என கூறி பலரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகிறார்கள். அவர்களுக்காக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 23ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


latest tamil news



குறிப்பாக 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 5வது மெகா தடுப்பூசி முகாமின்போது 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். 4வது மெகா தடுப்பூசி முகாமில் 10 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இந்த வாரம் 30 லட்சமாக உயர்ந்திருக்கிறது. சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-அக்-202121:44:39 IST Report Abuse
RajanRajan அமைச்சன் அண்ணா, அப்போ அன்னிக்கு ஊசி போடுறவங்களுக்கு அறிவாலய இலவச குவாட்டர் பிரியாணி பொட்டலம் கொடுப்பீங்களாக்கும்???? கும்கலக்கா...
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
18-அக்-202117:37:54 IST Report Abuse
sridhar தடுப்பு ஊசி போட்டு கொண்டால் பிரியாணி இநாம் என்று சொல்லுங்கள். தமிழகம் முழுதும் கூட்டம் கூடிடும்.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
18-அக்-202117:28:37 IST Report Abuse
S. Bharani அடடா.... இவ்வளவு அறிவு பூர்வமாக சிந்தனை திறன் உடைய அமைச்சரை உலகம் முழுவதும் தேடியும் கிடைத்தல் அரிது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X