பொது செய்தி

இந்தியா

மழையால் தவிப்பு: கேரள முகாம்களில் 10 ஆயிரம் பேர்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, 235 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 15ம் தேதி மேலும் வலுப்பெற்றதால் கேரளா முழுவதும் கனமழை பெய்தது. தெற்கே திருவனந்தபுரம் தொடங்கி வடக்கே காசர்கோடு வரை அனைத்து

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, 235 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.latest tamil newsதென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 15ம் தேதி மேலும் வலுப்பெற்றதால் கேரளா முழுவதும் கனமழை பெய்தது. தெற்கே திருவனந்தபுரம் தொடங்கி வடக்கே காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அதிகனமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோட்டயத்தின் கூட்டிங்கால் மற்றும் இடுக்கியின் கோக்கையார் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பல வீடுகள் சேற்றில் அடித்துச் செல்லப்பட்டன; 24 பேர் உயிரிழந்தனர்.


latest tamil newsமாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளை ஒட்டியுள்ள பல மாவட்டங்களை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, 235 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் கேரளாவில் உள்ள முக்கிய அணைகளைத் திறந்து வெள்ளத்தை வெளியேற்றுவது குறித்து முடிவு எடுக்க, கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-202123:26:16 IST Report Abuse
tata sumo swamye saranam ayyappa
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-அக்-202119:32:31 IST Report Abuse
Ramesh Sargam என்று சபரிமலை விஷயத்தில் கேரளா அரசு மோசமாக நடந்து கொண்டதோ அன்றிலிருந்து அந்த மாநிலத்திற்கு தொடர்ந்து பிரச்சினைமேல் பிரச்சினை.
Rate this:
Cancel
18-அக்-202113:18:01 IST Report Abuse
ஆரூர் ரங் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு RSS இன் சேவா பாரதீ பெருமளவில் உதவுகிறது. 😇 ஆயிரக்கணக்கான சேவா பாரதி ஊழியர்கள் இரவும் பகலும்👌 உழைக்கிறார்கள். ஆனால் நன்றி கெட்ட அந்த மக்கள் இந்த இக்கட்டில் கூட நன்றி மறந்து இந்துத்துவா ஒழிக மோதி ஒழிக என ட்விட்டரில் பதிவிட்டு😡 வருகின்றனர். ஏன் மீண்டும் மீண்டும் வெள்ளம் வராது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X