பொது செய்தி

தமிழ்நாடு

10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:வெப்பச்சலனம் காரணமாகஇன்று 18ம்தேதி: கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்,
Tamilnadu, Rain, Weather, 10 District, Rain Alert, Weather Report, தமிழகம், 10 மாவட்டங்கள், மிதமான மழை, சென்னை, வானிலை மையம்

சென்னை: ‛‛கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


வெப்பச்சலனம் காரணமாக



latest tamil news


இன்று 18ம்தேதி: கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 19ம் தேதி: தென் மாவட்டங்கள், புதுகை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக



latest tamil news


வரும் 20ம் தேதி: டெல்டா மாவட்டங்கள், புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி , பெரம்பலுார், அரியலுார், கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 21ம் தேதி: டெல்டா மாவட்டங்கள், புதுகை, சிவகங்கை,மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


வரும் 22ம் தேதி: சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், திருச்சி , பெரம்பலுார், அரியலுார், கரூர், கடலுார், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


சோலையார் (கோவை) 11செ.மீ., சின்னக்கல்லார், சின்கோனா (கோவை) தலா 10 செ.மீ., பந்தலுார் (நீலகிரி) 9 செ.மீ., வால்பாறை (கோவை) 7 செ.மீ., தேவலா (நீலகிரி) 6 செ.மீ., பெரியாறு (தேனி) 5 செ.மீ., வாலாஜா (ராணிப்பேட்டை) 4 செ.மீ., பேராவூரணி, (தஞ்சாவூர்), திண்டுக்கல், செங்கோட்டை, (தென்காசி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 3 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



அரபிக்கடல் பகுதிகள்:


இன்று 18ம் தேதி: கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X