ரேபரேலி: சந்தையில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட சகோதரிகள் மூவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் மிர்ஸா இனயதுல்லாப்பூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மகள்கள், பிஹு, 4, விதி, 6, வைஷ்ணவி, 8. இவர்கள், சந்தையில் நொறுக்குத் தீனி வாங்கி சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இதுகுறித்து, நவீன்குமார் கூறுகையில், 'ஜமுனாநகர் சந்தைக்கு கடந்த 15ம் தேதி இரவு சென்ற குழந்தைகள் மூவரும், அங்கு பொரி உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி வந்து சாப்பிட்டனர். அப்போதிலிருந்து அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டது. வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தனர். மருத்துவமனையில் சேர்த்தோம். சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து மூவரும் இறந்தனர்' என்றார்.

தகவலறிந்த மாவட்ட நீதிபதி மற்றும் போலீசார் அந்த கிராமத்துக்குச் சென்று, சிறுமிகள் சாப்பிட்ட தின்பண்டத்தின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். 'சிறுமிகளின் உடலை உடற்கூராய்வு செய்தும், அதில் உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE