பொது செய்தி

தமிழ்நாடு

நர்சரி பள்ளிகள் திறப்பு எப்போது

Added : அக் 18, 2021
Share
Advertisement
சென்னை : நர்சரி பள்ளிகளை திறப்பது தொடர்பாகவும் அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.தமிழகத்தில் செப். 1ல் இருந்து 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.வரும் 1ம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை

சென்னை : நர்சரி பள்ளிகளை திறப்பது தொடர்பாகவும் அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் செப். 1ல் இருந்து 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.வரும் 1ம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் பிளே ஸ்கூல் என்ற மழலையர் பள்ளிகளையும் 1ம் தேதி முதல் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

இதற்கிடையே பள்ளிகளை திறந்து மாணவர்களை கையாளும் விதம் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.இதுதொடர்பாக 21ம் தேதி ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தலைமையில் இயக்குனர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X