பொது செய்தி

இந்தியா

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
லக்கிம்பூர்: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த அக்.,3-ம் தேதி உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு
Farmers Protest, Nationwide, Rail Roko, Samyukta Kisan Morcha, விவசாயிகள், போராட்டம், ரயில் மறியல், லக்கிம்பூர், வன்முறை, மத்திய அமைச்சர், அஜய் மிஸ்ரா

லக்கிம்பூர்: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த அக்.,3-ம் தேதி உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news



இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (அக்.,18) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தின் வடக்கு மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
18-அக்-202121:12:22 IST Report Abuse
r ravichandran கார் ஏற்றி கொன்றது எவ்வளவு படு பாதக செயலோ அதற்கு சற்றும் குறைந்தது இல்லை இந்த போராட்டக்காரர்கள் செய்யும் அட்டுழியம். ரெயில் மறியல், ஓராண்டாக ஒரு தேசிய நெடுஞ்சாலையை முடக்கி வைத்து இருப்பதை சுப்ரீம் கோர்ட் பல முறை எடுத்து சொல்லியும் இந்த போராட்டக்காரர்கள் தங்கள் செயலை மாற்றி கொள்ளவில்லை. மத்திய பிஜேபி அரசும் வரும் ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டு அமைதி காக்கிறது. போராட்டம் நடத்தி வருபவர்களும் , அவர்களது முக்கிய ஸ்பான்சர்களும் எப்படியாவது மத்திய பிஜேபி அரசு இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்து , அதனால் உத்தர பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்று நினைக்கின்றனர். இவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு மத்திய அரசு அமைதி காக்கிறது. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் முடிந்த பிறகு மத்திய அரசு தனது வேலையை காட்டும் என்று எதிர் பார்க்கலாம்.
Rate this:
Cancel
18-அக்-202118:18:45 IST Report Abuse
ஆரூர் ரங் அதே துயர நிகழ்வில் அடித்துக் கொலை செய்யபட்ட. அப்பாவிகாக இவர்கள் வருத்தப்படவில்லை🤔. கொலை குற்றவாளிகளை அடையாளம் தெரிந்தும் போலீஸ் வசம் ஒப்படைக்கவுமில்லை . ஆக இந்த தரகர் கூட்டத்திற்கு மட்டும்👹 குற்றவாளிகளை காப்பாற்றும் உரிமை உண்டா?
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
18-அக்-202117:44:52 IST Report Abuse
Priyan Vadanad இந்த விவசாயிகளுக்கு இன்னும் உணர்வில்லை. சங்கை எடுத்து ஊதுகின்றார்கள். யாருடைய காதில்? மௌன சாமியார் காதில். செலக்ட்டிவ் செவிடர் காதில். தலையெழுத்தே என்று பேசாமல் வேலையை பார்க்க போகவேண்டியதுதானே உயிர்களும் பயிர்களுமாவது மிச்சமாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X