மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (10)
Share
லக்கிம்பூர்: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த அக்.,3-ம் தேதி உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு
Farmers Protest, Nationwide, Rail Roko, Samyukta Kisan Morcha, விவசாயிகள், போராட்டம், ரயில் மறியல், லக்கிம்பூர், வன்முறை, மத்திய அமைச்சர், அஜய் மிஸ்ரா

லக்கிம்பூர்: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த அக்.,3-ம் தேதி உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news



இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (அக்.,18) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தின் வடக்கு மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X