5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (8)
Share
சென்னை: தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் மாநகர போலீஸ் கமிஷனராகவும் பதவி வகிப்பார் என்று
5 IPS, Officer, DGP, TNGovt, Order, 5 ஐபிஎஸ், ஆபீஸர், அதிகாரிகள், டிஜிபி, பதவி உயர்வு, தமிழக அரசு, உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் மாநகர போலீஸ் கமிஷனராகவும் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதேபோல், முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால் ஆகியோரும் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேலும், சங்கர், வெங்கட்ராமன், அமரேஷ்பூஜாரி, வினித் தேவ் வாங்கடே, மகேஸ்குமார் அகர்வால், கபில்குமார் சாரட்கர் ஆகிய ஆறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X