உ.பி.,யில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை

Added : அக் 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் பூபேந்திர சிங் என்னும் வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில்
Lawyer Killed, Inside Court Complex, Uttar Pradesh, UP, Shahjahanpur, உபி, உத்தரபிரதேசம், நீதிமன்றம், வளாகம், வழக்கறிஞர், சுட்டுக்கொலை

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் பூபேந்திர சிங் என்னும் வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவரது சடலத்தின் அருகே நாட்டு கைத்துப்பாக்கி இருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து எஸ்.பி., எஸ்.ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், ‛முதல்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்தபோது அவரது அலுவலகத்தில் யாரும் இல்லை. தடயவியல் குழு ஆய்வு செய்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாக,' கூறினார்.


latest tamil news


இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‛கொலை சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தபோது ஒருவர் வந்து வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கூறினார். நாங்கள் பார்த்தபோது அவரது உடல் அருகே நாட்டுத் துப்பாக்கியை பார்த்தோம். சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கறிஞர் முன்பு வங்கியில் பணிபுரிந்தார். கடந்த 4, 5 ஆண்டுகளாக தான் அவர் வழக்கறிஞராக பணியாற்றினார்,' என்றார். கொலை செய்தவர்கள் யார்? என்பதை அறிய சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-202121:46:11 IST Report Abuse
முக்கண் மைந்தன் எங்கெ நடந்துதுன்னு பாத்தேன், வளக்கம்போல ..............
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
18-அக்-202117:41:28 IST Report Abuse
Raj சட்டம் ஒழுங்கு... பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ....
Rate this:
Venkata Krishnan - Toronto ,கனடா
18-அக்-202120:33:33 IST Report Abuse
Venkata Krishnanதங்கள் முதுகைப் பார்த்துக்கொள்ளுங்கள்...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
18-அக்-202121:13:30 IST Report Abuse
Balajiநம்மூரலோ நடக்காததா? போனவாரம் கூட தீம்கா கூட்டு கட்சியோட மெம்பெர் ரவுடி ஒருத்தந போட்டு தள்ளி இருக்காய்ங்க இன்னொரு குரூப்பு... இந்த செய்தி எல்லாம் வாசிக்கறதில்லியா பாய்?...
Rate this:
Cancel
18-அக்-202117:16:10 IST Report Abuse
அப்புசாமி அமைதிப் பூங்கா .. உ.பி யில் யோகியார் ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X