உ.பி.,யில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை| Dinamalar

உ.பி.,யில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை

Added : அக் 18, 2021 | கருத்துகள் (7)
Share
ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் பூபேந்திர சிங் என்னும் வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில்
Lawyer Killed, Inside Court Complex, Uttar Pradesh, UP, Shahjahanpur, உபி, உத்தரபிரதேசம், நீதிமன்றம், வளாகம், வழக்கறிஞர், சுட்டுக்கொலை

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் பூபேந்திர சிங் என்னும் வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவரது சடலத்தின் அருகே நாட்டு கைத்துப்பாக்கி இருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து எஸ்.பி., எஸ்.ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், ‛முதல்கட்ட விசாரணையில், சம்பவம் நடந்தபோது அவரது அலுவலகத்தில் யாரும் இல்லை. தடயவியல் குழு ஆய்வு செய்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாக,' கூறினார்.


latest tamil news


இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‛கொலை சம்பவம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தபோது ஒருவர் வந்து வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கூறினார். நாங்கள் பார்த்தபோது அவரது உடல் அருகே நாட்டுத் துப்பாக்கியை பார்த்தோம். சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கறிஞர் முன்பு வங்கியில் பணிபுரிந்தார். கடந்த 4, 5 ஆண்டுகளாக தான் அவர் வழக்கறிஞராக பணியாற்றினார்,' என்றார். கொலை செய்தவர்கள் யார்? என்பதை அறிய சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X