பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: 35% மக்கள் கருத்து| Dinamalar

பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: 35% மக்கள் கருத்து

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (6)
Share
இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என, 35 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து, கராச்சி நகரை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தெரிவித்து உள்ளதாவது:பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களை சேர்ந்த 18 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 35 சதவீதம் பேர்

இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என, 35 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news



பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து, கராச்சி நகரை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தெரிவித்து உள்ளதாவது:பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களை சேர்ந்த 18 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 35 சதவீதம் பேர் 'பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' எனத் தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர், பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக இருப்பதாகவும், 20 சதவீதம் பேர், 'பெண்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளனர்' என்றும் தெரிவித்து உள்ளனர்.


latest tamil news



கைபர் பக்துன்இக்வா என்ற பகுதியில், 'பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை' என, 40 சதவீத பேர் தெரிவித்து உள்ளனர். இதேபோல், 19 சதவீத பலுசிஸ்தான் மக்கள், 'பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என தெரிவித்துள்ளனர். மேலும் 29 சதவீத பெண்கள் தாங்கள் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பாக உள்ளதாகவும், அதற்கு 22 சதவீத ஆண்கள் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X