அரசியல் செய்தி

தமிழ்நாடு

அலைகடல் ஓய்வதுமில்லை; அ.தி.மு.க., சாய்வதுமில்லை - பன்னீர்செல்வம், பழனிசாமி அறிக்கை

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை மேற்கொள்வதை கண்டித்த அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ‛‛அலைகடல் ஓய்வதுமில்லை; அ.தி.மு.க., சாய்வதுமில்லை,'' என தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய
ADMK, PanneerSelvam, Palanisamy, OPS, EPS, Vijayabaskar, Raid, DVAC, அதிமுக, பன்னீர்செல்வம், பழனிசாமி, ஓபிஎஸ், இபிஎஸ், விஜயபாஸ்கர், லஞ்ச ஒழிப்பு சோதனை, ரெய்டு, அலைகடல்

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை மேற்கொள்வதை கண்டித்த அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ‛‛அலைகடல் ஓய்வதுமில்லை; அ.தி.மு.க., சாய்வதுமில்லை,'' என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் தி.மு.க., அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது. அ.தி.மு.க., பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத தி.மு.க., விடிந்தவுடன் போலீசை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.


latest tamil news


அ.தி.மு.க., ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம்; இந்த இயக்கம் தி.மு.க.,வின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை. எத்தனை அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், அ.தி.மு.க., எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
19-அக்-202100:42:49 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஆட்சியில் இருந்த போது திமுகவுக்குக் கருணை காட்டாமல் இருந்திருந்தால், இந்த நிலை ஏற்படாது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-அக்-202122:01:52 IST Report Abuse
Ramesh Sargam முதலில் வேலு மணி. பிறகு வீர மணி. இன்றைக்கு விஜயபாஸ்கர். நாளைக்கு......?? இப்படி தினம் தினம் ஒருவரின் வீட்டில் சோதனை. ஆனால், வீராப்பான பேச்சு - "அலைகடல் ஓய்வதுமில்லை அ.தி.மு.க., சாய்வதுமில்லை" எப்படி இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் - சூடு சொரணை இல்லாமல்..
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-அக்-202121:37:52 IST Report Abuse
RajanRajan ஆடபிறந்தவனே ஆடி வா ஆள பிறந்தவனே ஆடிவா ஆடிவா .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X