சூரத் தொழிற்சாலை தீவிபத்தில் இருவர் பலி; 125 பேர் மீட்பு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021
Share
Advertisement
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர். 125 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சூரத் நகரின் கடோதரா பகுதியில் வரேலி எனுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் 100க்கும் மேற்பட்ட
Gujarat, Factory, Fire, 2 Workers Dead, 125 Workers Safe, சூரத், பேக்கேஜ், தொழிற்சாலை, தீவிபத்து, இருவர்பலி, 125பேர் மீட்பு

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர். 125 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சூரத் நகரின் கடோதரா பகுதியில் வரேலி எனுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணியில் இருந்தனர். அவர்கள் விரைவாக அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்றனர்.


latest tamil news


சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மாடியில் நின்று கொண்டு உயிரைக் காப்பாற்றும்படி தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக ஹைட்ராலிக் கிரேன் வரவழைக்கப்பட்டு ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதுவரை 125 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர்.

பர்டோலி சரக டி.எஸ்.பி., ரூபால் சோலங்கி கூறுகையில், "தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னரே தீ விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும்," என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X