ஸ்பெயினில் 'அழுகை அறை' அறிமுகம்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
மாட்ரிட்: ஒரு சிலருக்கு துன்பம் ஏற்பட்டாலும் அழுகையே வராது. கடும் மன அழுத்தத்தில் உள்ளவர்களும் அவ்வளவு எளிதில் அழ மாட்டார்கள்.'அழுகையை அடக்க அடக்க மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். எனவே, கவலை இருந்தால் கண்ணீர் விட்டு அழ வேண்டும்' என, மனநல மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், கவலை மற்றும் மன நல பிரச்னைகள் உள்ளவர்களுக்காகவும், துயரைச் சொல்லி அழுது

மாட்ரிட்: ஒரு சிலருக்கு துன்பம் ஏற்பட்டாலும் அழுகையே வராது. கடும் மன அழுத்தத்தில் உள்ளவர்களும் அவ்வளவு எளிதில் அழ மாட்டார்கள்.


'அழுகையை அடக்க அடக்க மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். எனவே, கவலை இருந்தால் கண்ணீர் விட்டு அழ வேண்டும்' என, மனநல மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.latest tamil news


இந்நிலையில், கவலை மற்றும் மன நல பிரச்னைகள் உள்ளவர்களுக்காகவும், துயரைச் சொல்லி அழுது ஆறுதல் அடைய ஆள் இன்றி தவிப்பவர்களுக்காகவும் ஸ்பெயினில் தனி அறையை உருவாக்கி உள்ளனர். 'அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என, வினோத வாசகத்துடன் வரவேற்கிறது, ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அந்த அழுகை அறை. மனநல பிரச்சனையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


latest tamil news


இந்த அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் தொலைபேசிகள் உள்ளன. அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு. மனதில் கவலை உள்ள பலரும் இந்த அறைக்கு வந்து அழுது ஆறுதல் தேடுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் இந்த அழுகை அறைக்கு வரவேற்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (9)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-அக்-202120:30:27 IST Report Abuse
Ramesh Sargam அழுகை அறைக்கு பக்கத்தில், 'கண்ணை துடைத்துவிட ஒரு அறை' வைப்பீர்களா...??
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-அக்-202119:27:32 IST Report Abuse
Ramesh Sargam விசித்திரமான முயற்சி.
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
18-அக்-202119:21:05 IST Report Abuse
mupaco எங்க உறவுக்காரர் சொல்லி இருக்காப்ல . தண்ணிய போட்ட ஒருத்தர் நிறைய அழுவாராம் . சொன்னாலும் கேக்க மாட்டாராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X