மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் உள்ளார். அவருக்கு தற்போது அதிகாரிகள் நல்ல சிந்தனைகளை புகட்டி வருவதாகவும் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் தான் ஒரு நல்ல இந்திய குடிமகனாக நடந்து கொள்வேன் என்றும், நாட்டிற்கு சேவை செய்வேன் என்றும் ஆரியன் கான் அதிகாரிகளிடம் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் கைதாகும் கைதிகளை நல்வழிப்படுத்த பகவத் கீதை, குரான், பைபிள் உள்ளிட்ட மத நூல்கள் கைதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களிடம் அளிக்கப்படும். இவற்றைப் படித்து சிறையில் உள்ள கைதிகள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள சிறைத்துறை முயற்சி மேற்கொள்ளும். இதேபோல தற்போது ஆர்யன் கானுக்கு சிறை அதிகாரிகள் நல்ல கருத்துக்களை பரிசீலித்து வருகின்றனர். முன்னதாக தந்தை மற்றும் தாயாருடன் 10 நிமிடங்கள் அலைபேசியில் பேச ஆரியன் கானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்ததும் தான் ஒரு நல்ல குடிமகனாக நடந்து கொள்வதாக ஆரியன் கான் அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.