ஆசிரம மேலாளர் கொலை வழக்கு: சர்ச்சை சாமியாருக்கு ஆயுள்

Added : அக் 18, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேருக்கு சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அரியானாவைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் ராம்ரஹீம்.55 இவர் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். சிர்சாவில் ஆசிரமம் அமைத்து இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2017 -ம் ஆண்டு கோர்ட் சாமியார்
 Dera Chief Gurmeet Ram Rahim, 4 Others Sentenced To Life In Murder Case

புதுடில்லி: ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேருக்கு சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


அரியானாவைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் ராம்ரஹீம்.55 இவர் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். சிர்சாவில் ஆசிரமம் அமைத்து இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2017 -ம் ஆண்டு கோர்ட் சாமியார் ரஹீமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ரோக்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news




இந்நிலையில் 2002-ம்ஆண்டு ஆசிரமத்தின் மேலாளராக இருந்த ரஞ்சித்சிங் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேர் மீது அரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து சாமியார் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 31 லட்சம் அபராதமும் விதித்து, கொலை செய்யப்பட்ட ரஞ்சித்சிங்கிற்கு இழப்பீடு தொகையை வழங்கிட வேண்டும் எனவும் இன்று (அக்.18) தீர்ப்பளித்தார்.

மற்ற மூன்று குற்றவாளிகளான கிருஷ்ணன் லால், ஜஸ்பீர்சிங், அவதார்சிங் ஆகியோருக்கு தலா ரூ. 1.25 லட்சம் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
18-அக்-202121:57:50 IST Report Abuse
Venkatakrishnan தங்களையே காப்பாத்திக்கொள்ள முடியாத சாமியார்கள் எப்படி ஊரை காப்பாற்றுவார்கள்..? இது தெரியாமல் எப்படி பல மூடர் கூட்டங்கள் நாட்டில் உள்ளது என்பது தெரியவில்லை... ஆச்சர்யம்...
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
18-அக்-202119:13:34 IST Report Abuse
M  Ramachandran ஆடம்பரா வாழ்க்கை வாலிபவன் எப்படி சாமியாராக வளம் வந்து மக்களுக்கு நாள் வழி கட்ட முடியும். மூட மக்கள் இது போனற ஏத்தி பிழைப்பவனை அடையாளம் காண முடிய வில்லையா? பெரும்பாலும் பெண்கள் தான் இது போனற கயவர்களிடம் மாட்டிகிக்கொள்கின்றனர்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-அக்-202121:07:10 IST Report Abuse
Visu Iyerநித்தியானந்தாவை மறந்து விட்டீர்களா.....
Rate this:
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
18-அக்-202118:52:15 IST Report Abuse
S.Govindarajan. இந்து சாமியாராக இருந்தால் ஆளாளுக்கு கூவுவார்கள்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-அக்-202121:08:18 IST Report Abuse
Visu Iyerசாமியாரில் மத வேறுபாடு பார்ப்பவர் மதத்தை வியாபராமாக்குபவர் என்று பொருள்... மதத்தை வியாபார பொருளாக நினைப்பவர்கள் இந்துவாகவே இருக்க முடியாது என்று சாஸ்திரம் சொல்கிறது... நான் எதுவும் சொல்லவில்லை.. அங்கே உள்ளதை தான் சொல்லி இருக்கிறேன்....
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
19-அக்-202102:01:36 IST Report Abuse
Aarkayசாமியார் என்பவரே மதம் சார்ந்தவர் தான், இதில் இப்படி ஒரு உளறல் வேறு பெரிய மேதாவி போல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X