ஆசிரம மேலாளர் கொலை வழக்கு: சர்ச்சை சாமியாருக்கு ஆயுள் | Dinamalar

ஆசிரம மேலாளர் கொலை வழக்கு: சர்ச்சை சாமியாருக்கு ஆயுள்

Added : அக் 18, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி: ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேருக்கு சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அரியானாவைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் ராம்ரஹீம்.55 இவர் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். சிர்சாவில் ஆசிரமம் அமைத்து இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2017 -ம் ஆண்டு கோர்ட் சாமியார்
 Dera Chief Gurmeet Ram Rahim, 4 Others Sentenced To Life In Murder Case

புதுடில்லி: ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேருக்கு சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


அரியானாவைச் சேர்ந்த சர்ச்சை சாமியார் ராம்ரஹீம்.55 இவர் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். சிர்சாவில் ஆசிரமம் அமைத்து இரு பெண்களை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2017 -ம் ஆண்டு கோர்ட் சாமியார் ரஹீமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ரோக்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news
இந்நிலையில் 2002-ம்ஆண்டு ஆசிரமத்தின் மேலாளராக இருந்த ரஞ்சித்சிங் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேர் மீது அரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து சாமியார் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 31 லட்சம் அபராதமும் விதித்து, கொலை செய்யப்பட்ட ரஞ்சித்சிங்கிற்கு இழப்பீடு தொகையை வழங்கிட வேண்டும் எனவும் இன்று (அக்.18) தீர்ப்பளித்தார்.

மற்ற மூன்று குற்றவாளிகளான கிருஷ்ணன் லால், ஜஸ்பீர்சிங், அவதார்சிங் ஆகியோருக்கு தலா ரூ. 1.25 லட்சம் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X