பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,192 ஆக சற்று குறைந்துள்ளது: 1,423 பேர் நலம்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,218 -ல் இருந்து 1,192 ஆக சற்று குறைந்துள்ளது.13 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,423 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,26,786 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,192 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,218 -ல் இருந்து 1,192 ஆக சற்று குறைந்துள்ளது.13 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,423 பேர் குணமடைந்து உள்ளனர்.latest tamil news
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,26,786 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,192 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,88,284 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,95,38,602 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 711 பேர் ஆண்கள், 481 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,69,074 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,19,172 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,423 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,37,802 ஆக உயர்ந்துள்ளது.

13 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் 9 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,912 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னைசென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக இருந்த நிலையில் இன்று (அக்.18 ம் தேதி) 150 ஆக குறைந்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாந்தகுமார் - Alangulam,இந்தியா
19-அக்-202100:29:12 IST Report Abuse
சாந்தகுமார் கோவிட் எண்ணிக்கை குறிப்பிடுவது போல் நீரழிவு நோயாளிகள், புற்று நோய்யாளி எண்ணிக்கைகள் தினசரி இதய அறுவை சிகிசை மெற்கொள்பவர் எண்ணிக்கை குறப்பிட வழி செய்யுங்கள்.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
18-அக்-202121:59:56 IST Report Abuse
s t rajan தமிழ்நாட்டை பீடித்துள்ள கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்கள்.... (1) வார பத்திரிகை படிக்கலாம் என்றால்... குமுதம், ஆனந்த விகடன், தராசு, நக்கீரன்னு எல்லாமே இந்து எதிர்ப்பு.., (2) செய்தி பத்திரிகை பக்கம் போனால் தினத்தந்தி, தினகரன், மாலைமலர், மாலைமுரசு, லேட்டஸ்டாக தி இந்து என்று எல்லாமே இந்து எதிர்ப்பிலே மதசார்பின்மையை காண்பவை. (3) சரி டிவியாவது பார்க்கலாம் என்றால்.. நடுநிலை என்பது மட்டும் என்ன என்று தெரியாது என சொல்லும் நியூஸ் 18, நியூஸ்7, புதிய தலைமுறை, தினத்தந்தி, விஜய்டிவி, கலைஞர் குழும டிவி, சன் குழும டிவி என்று காணொளி ஊடகங்கள். (4) அப்படியே திரும்புனா பெருமாள் முருகன், மனுஷ்ய புத்திரன், அவன் இவன்னு எழுத்தாளர்கள்.... (5) இப்படிக்கா திரும்புனா கோவன், வளர்மதி, நந்தினி, பியூஸ் மானுஸ், பூவுலகின் சுந்தரராஜன், விடயம் விடயம்னு ஒருத்தர் கதைப்பாரே அவரு, ஜூலி, உதயகுமார், சுந்தரவல்லி, சகாயம்னு வதவதனு சமூக ஆர்வலர்கள். (6) அப்புறம் அய்யாக்கண்ணு, சேனாதிபதி, அப்படி இப்படின்னு விவசாய ஆர்வலர்கள் என சொல்லிக்கொள்பவர்கள். (7) திரைபடமாவது பார்த்து பொழுது போக்கலாம்னு பார்த்தா சோசப் விஜய், விஜய் சேதுபதி, பாரதிராஜா, அமீர், சமுத்திரக் கனி, கார்த்தி, சூர்யா, விஷால், நாசர், மன்சூர்னு ஒரு கும்பல். (8) அரசியல்ல கேட்கவே வேண்டாம்.... மேற்குறிப்பிட்ட எல்லோரையும் கட்டி மேய்க்கும் ஸ்டாலின், வைகோ, திருமா, இ.கம்மிஸ், மா. கம்மிஸ், அண்டப் புளுகன் சைமன், ஜவகொரில்லா, அன்சாரினு பெரிய லிஸ்ட். ஆக மொத்தம்.., கொரானாவை விட கொடுமையான கும்பல்கள் கூடத்தான் தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாமெல்லாம் சோம்பேறிகள். சோற்றில் உப்பு சேர்த்துக் கொள்ளாதவர்கள். நம் பக்கத்து வீடு பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கூட அறியாமல் வாழ்வை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். திராவிடக் கும்பல்களின் அழிவுப் பிரச்சாரத்தை உணராமல் சன் டிவியில் வரும் சீரியல்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலைமை தொடருமேயானால் தமிழ் நாடே சுடுகாடு ஆகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X