பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அக்., 19, 1888நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், 1888 அக்., 19ல் பிறந்தவர், வெ.ராமலிங்கம் பிள்ளை. நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகவும், அதன் பின், தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார். காங்கிரசில் இணைந்து, திருச்சி மாவட்டச் செயலர், கரூர் மற்றும் நாமக்கல் வட்டாரத் தலைவராக செயலாற்றினார்.காந்திய பாதையில், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1932ல் நடந்த உப்பு

இதே நாளில் அன்று


அக்., 19, 1888



நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், 1888 அக்., 19ல் பிறந்தவர், வெ.ராமலிங்கம் பிள்ளை. நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகவும், அதன் பின், தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார். காங்கிரசில் இணைந்து, திருச்சி மாவட்டச் செயலர், கரூர் மற்றும் நாமக்கல் வட்டாரத் தலைவராக செயலாற்றினார்.காந்திய பாதையில், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1932ல் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார்.தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞரானார். சாகித்ய அகாடமியில், தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார். கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என, பல நுால்கள்
எழுதியுள்ளார்.இவர் எழுதிய, மலைக்கள்ளன் என்ற நாவல், எம்.ஜி.ஆர்., நடித்து, அதே பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்தது. தமிழக சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 'பத்ம பூஷண்' உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். 1972 ஆக., 24ல், தன் 83வது வயதில் காலமானார்.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-அக்-202112:58:29 IST Report Abuse
Bhaskaran அவரது சுயசரித்திரம் என்கதை மிகவும் நன்றாக இருக்கும் மிகசிறந்தஓவியர் ,அவரது திருக்குறள் உரைதான் தமிழில் மிகசிறந்த உரை நூல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X