'வாக்ஸின் மைத்ரி' திட்டம் மூலமாக உபரி தடுப்பு மருந்து கோவாக்ஸ் திட்டத்துக்கு அளிக்கப்படும்: நிதியமைச்சர்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நியூ யார்க்: 'வாக்ஸின் மைத்ரி' திட்டம் மூலமாக உபரி தடுப்பு மருந்து கோவாக்ஸ் திட்டத்துக்கு அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.ஜி-30 சர்வதேச வங்கிகள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தடுப்பு மருந்து தயாரிக்க

நியூ யார்க்: 'வாக்ஸின் மைத்ரி' திட்டம் மூலமாக உபரி தடுப்பு மருந்து கோவாக்ஸ் திட்டத்துக்கு அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news




ஜி-30 சர்வதேச வங்கிகள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தடுப்பு மருந்து தயாரிக்க மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை தொடர்ந்து இயங்க வைக்க உலகநாடுகள் ஆவண செய்யவேண்டும். மேலும் கொரோனா தாக்கத்துக்கு எதிராக சர்வதேச நிதி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக 36வது ஜி-30 சர்வதேச வங்கி வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் நிவாரணி நிதி, காலநிலை மாற்றம், கொரோனா தாக்கத்தை தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய நிதித்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை தடுக்கவும் தடுப்பு மருந்துகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கவும் உலக அளவில் சரிசமமாக பணப்புழக்கத்தை செயல்படுத்தவும் உலக நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.


latest tamil news




இதற்கு உலக சுகாதார அமைப்பின் பங்கு இன்றியமையாதது என்று தெரிவித்த அவர், இந்தோ பசிபிக் பகுதியில் தடுப்பு மருந்து மூலப் பொருட்களை வினியோகிக்கும் கிளை நிறுவனங்களை தொடர்ந்து இந்தியா ஆதரிப்பதாக கூறியுள்ளார். மத்திய மோடி அரசு 'வக்சின் மைத்திரி' திட்டம் மூலமாக இந்தியாவின் தேவைபோக மிச்சமான தடுப்பு மருந்துகளை உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துக்கு இலவசமாக அளிக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202122:44:16 IST Report Abuse
ஆரூர் ரங் நம்மிடமிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடுகள் நிம்மதியாக🤔 இருந்தால் தான் நாமும் பிழைப்பு நடத்த முடியும். பெரும்பாலானவை ஏழை😪 நாடுகள் என்பதால் நமது தடுப்பூசிகளைக் கொடுத்து காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
18-அக்-202122:10:14 IST Report Abuse
Dhurvesh செத்து போன பொருளாதாரத்திக்கு ஒரு FINANCE MINISTER / வித்து போன விமானத்துறைக்கு ஒரு விமானத்துறை மந்திரி / விற்க போகிற RLY துறைக்கு ஒரு RLY அமைச்சர் / அணைத்து துறைகளையும் விருப்பத்திற்கு ஒரு பிரதமர் , இது தான் கேவலமான இந்தியா பாரீர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X