சிறப்பு புலனாய்வு படை மீண்டும் காஷ்மீருக்கு விரைவு! தாக்குதல் குறித்து விசாரிக்க அமித் ஷா உத்தரவு

Updated : அக் 20, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :ஜம்மு - காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக குறிவைத்து கொல்லப்படுவதை விசாரிக்க சென்று, சமீபத்தில் டில்லி திரும்பிய சிறப்பு புலனாய்வு படையினரை, மீண்டும் காஷ்மீர் சென்று விசாரணையை தொடரும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது.
 சிறப்பு புலனாய்வு படை ,காஷ்மீர், அமித் ஷா உத்தரவு

புதுடில்லி :ஜம்மு - காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக குறிவைத்து கொல்லப்படுவதை விசாரிக்க சென்று, சமீபத்தில் டில்லி திரும்பிய சிறப்பு புலனாய்வு படையினரை, மீண்டும் காஷ்மீர் சென்று விசாரணையை தொடரும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு பின், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகளை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியதை அடுத்து, அங்கு அமைதி திரும்ப துவங்கியது. வன்முறை சம்பவங்கள் படிப்படியாக குறைய துவங்கின.


நான்கு பேர் பலிஇந்நிலையில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தங்கள் வன்முறை வெறியாட்டத்தை ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் துவங்கி உள்ளனர்.இந்த மாத துவக்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நான்கு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை குழு கூட்டம் டில்லியில் நடந்தது.
இதில், ஜம்மு - காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர். இதையடுத்து ஜம்மு - காஷ்மீர் சென்று தாக்குதல் குறித்து விசாரிக்கும்படி, சிறப்பு புலனாய்வு படையினருக்கு அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.

சிறப்பு புலனாய்வு படையினர் ஜம்மு - காஷ்மீர் விவகாரங்களில் இதுவரை விசாரணை நடத்தியதில்லை. மத்திய அரசின் உத்தரவை அடுத்து, கூடுதல் இயக்குனர் தலைமையில் சிறப்பு புலனாய்வு படையினர் காஷ்மீர் விரைந்தனர்.விசாரணையை முடித்து கடந்த 16ல் டில்லி திரும்பினர். அன்று ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதலில், தெருவோர வியாபாரி ஒருவர் மற்றும் தச்சு தொழிலாளி ஆகியோர் பலியாகினர்.
இவர்களில் ஒருவர் பீஹாரின் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர். மற்றவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பிழைப்புக்காக ஜம்மு - காஷ்மீரில் வசித்து வந்தனர்.


28 விசாரணை அமைப்புகுல்காம் மாவட்டத்தின் வான்போ பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பிழைப்புக்காக வெளி மாநிலங்களில் இருந்து வந்த இருவர் பலியாகினர்; மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.ஜம்மு - காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி உள்ளது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக காஷ்மீர் வந்துள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினரை மீண்டும் ஜம்மு - காஷ்மீர் சென்று விசாரணையை துவக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார். இதன்படி சிறப்பு படையினர் மீண்டும் காஷ்மீர் விரைந்துள்ளனர்.அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஏன் என்பதை, டி.ஜி.பி., தில்பாக் சிங்குடன் இணைந்து விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


40 சதவீதம் அதிகரிப்புஜம்மு - காஷ்மீர் மட்டும் அல்லாமல் டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த பணியில் மத்திய புலனாய்வு படை, பாதுகாப்புப் படை, டில்லி போலீஸ் உட்பட 28 விசாரணை அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பயங்கரவாத குழுக்களுக்கு உதவும் நபர்களை அடையாளம் பார்த்து, கைது செய்யும் பணியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, பயங்கரவாதிகள் குறித்து வெளியாகும் உளவுத்துறை தகவல்கள், 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் மேற்பார்வையின் கீழ் நடக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தாக்குதல் குறித்து, என்.ஐ.ஏ., ஏற்கனவே விசாரணையை துவக்கி உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை கண்டறிய, கடந்த ஒரு வாரத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை மேற்கொண்டு உள்ளது.


நிலைப்பாடு என்ன?ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்கள், நாட்டு மக்களை கவலை அடையச் செய்கின்றன. சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டால் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிந்துவிடும் என, மத்திய அரசு வாக்குறுதி தந்தது. ஆனால், தற்போது நிலைமை முன்பைக் காட்டிலும் மோசமாகி வருகிறது. இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,லோக்சபா எம்.பி., - காங்.,


மத்திய அரசு மீது காங்., குற்றச்சாட்டுகாஷ்மீர் நிலவரம் குறித்து, காங்., - எம்.பி., ராகுல், டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜினி படீல், மாநில தலைவர் குலாம் அகமது மிர் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர் தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் காங்., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மோடி அரசு முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. போதிய நிர்வாக திறமை இல்லாத காரணத்தால், பயங்கரவாதிகளின் தாயகமாக ஜம்மு - காஷ்மீர் மாறும் நிலை உருவாகி உள்ளது.
அங்கு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் தான் இது நாள் வரை மோதல்கள் நடந்து வந்தன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பலவீனமான நிர்வாகத்தால், சாதாரண மக்கள் மீதும் தாக்குதல்கள் துவங்கியுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பீஹாரில் பதற்றம்பீஹாரின் பங்கா மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் குமார், 30, சமீபத்தில் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பீஹாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு அவரது உடல் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. பங்கா மாவட்டம் முழுதும் நேற்று பதற்றமாக இருந்தது. அரவிந்த் குமாரின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandiyan - Chennai,இந்தியா
19-அக்-202108:53:30 IST Report Abuse
Pandiyan வடஇந்தியாவுல முக்கியமான தேர்தல் வரும்போது எல்லாம் இந்த தீவிரவாதிகள் ..கையில் துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பிச்சுடுறானுங்க ..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19-அக்-202110:51:59 IST Report Abuse
 Muruga Velஉங்க துப்பாக்கியில் தோட்டா இருந்தா நீங்களும் சுடுங்க .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-அக்-202107:53:25 IST Report Abuse
Lion Drsekar பிரான்சில் இருந்து வாங்கிய அதனை போர்விமானங்களையும் காஷ்மீரில் வைத்தாலும் தவறு செய்பவர்கள் அவர்களாகவே உணர்ந்து இறைத்தூதர் கூறிய நற்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டால் மட்டுமே நல்ல வழி பிறக்கும், ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் அமைப்புகள் குறுநில மன்னர்களால் வித்திட்ட பிறகு என்ன செய்யமுடியும் எல்லா நிலைகளில் தெரிவிரவாதம் , குறுகிய நோக்கம், மனித நேயத்தையே இல்லாமல் அகராதியில் இருந்து எடுத்துவிட்டார்கள் ? இறைவனும் கைவிட்டுவிட்டார், வந்தே மாதரம்
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
19-அக்-202110:57:09 IST Report Abuse
கௌடில்யன்இறைத்தூதர் கூறிய நற்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டால் ... சரித்திரத்தை படித்துப் பாருங்கள் ..அந்த காலகட்டத்தில் இறைதூதரின் கருத்துக்களை ஒருமனதாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை ..அவரின் மரணத்திற்கு பிறகு நடந்த சண்டைகளை பற்றியும் படித்து பாருங்கள் ..குத்து வெட்டு கொலை இப்படியே இருக்கும் .....
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
19-அக்-202111:42:57 IST Report Abuse
தமிழ்வேள்இறைத்தூதர் மனித நேயத்தோடு இருந்தது இல்லை ...அறநெறி மீறிய போர் முறைகளை கையாண்டு ,வன்கொலை புரிந்த ஆசாமி ...பெண்களை மதிக்காமல், வலது கைசொந்தமாக்கிக்கொண்டவர்கள் என்றொரு வகையை உருவாக்கி, அயோக்கியத்தனம் வளர விதை போட்டவர் ....இவரையெல்லாம் இறைத்தூதர் என்பது நகைப்புக்குரிய ஒன்று ...இவரது முறைமீறிய வழிகாட்டல் , இன்று உலகம் முழுவதும் ஒரு ஒற்றை வன்முறை மதமாக இஸ்லாம் ,கசப்போடு பார்க்கப்படுகிறது...
Rate this:
Cancel
Venkat - Chennai,இந்தியா
19-அக்-202107:51:17 IST Report Abuse
Venkat இந்த நன்றி கெட்ட மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அவர்கள் மற்ற மதத்தினரோடு சேர்ந்து வாழ மாட்டார்கள். அவர்களுக்கு இருப்பது மத வெறி. அரசு அவர்களுக்கு செய்யும் உதவிகளை குறைத்து கொண்டு ராணுவ நடவடிக்கைகள் மூலம் துவம்சம் செய்து அடக்க வேண்டும். இவர்களை திருத்த முடியாது. மோடியே இன்னும் பத்து ஆண்டுகள் இந்தியாவை ஆள வேண்டும். அப்போது தான் இவர்களை அடக்கி வழிக்கு கொண்டு வர ஓரளவு வாய்ப்பு உண்டு. போதும்டா சாமி
Rate this:
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
19-அக்-202120:53:27 IST Report Abuse
Thirumuruganஇன்னும் பத்து ஆண்டுகளுக்கு மோதி அவர்கள் ஆட்சியா? இந்தியா தாங்குமா? இப்பவே அரசாங்க சொத்து அனைத்தையும் விற்று தின்னாச்சு. அடுத்த பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் இந்தியாவை எந்த நாட்டிடம் விற்பார்களோ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X