வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல் ஏன்? : அமைச்சர் விளக்கம்!

Updated : அக் 20, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
டாக்கா : ''சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், 2023 இறுதியில் நடக்க உள்ள தேர்தலுக்காக சிலர் திட்டமிட்டு செய்துள்ள சதி,'' என, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கமால் கூறியுள்ளார்.வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. ஹிந்துக்களின் கோவில்கள் மீதும்
வங்கதேச ஹிந்துக்கள், தாக்குதல் ஏன்? , அமைச்சர் விளக்கம்!

டாக்கா : ''சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், 2023 இறுதியில் நடக்க உள்ள தேர்தலுக்காக சிலர் திட்டமிட்டு செய்துள்ள சதி,'' என, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கமால் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. ஹிந்துக்களின் கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கமால் கூறியுள்ளதாவது:எந்த விலை கொடுத்தாவது, நாட்டில் மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. குற்றம் செய்தது யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது.

சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என அனைவரும் இந்த நாட்டின் மக்கள். அவர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சிலர் திட்டமிட்டு இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் ஜமாத்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என, சந்தேகப்படுகிறோம்.வரும் 2023 இறுதியில் வங்கதேச பார்லிமென்டுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதை சீர்குலைக்கும் வகையில், நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவதற்காக இந்த வன்முறை நடத்தியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


29 வீடுகளுக்கு தீ வைப்புவங்கதேசத்தின் கொமிலாவில், சமீபத்தில் துர்கா பூஜை நடந்தது. அப்போது முஸ்லிம்களின் புனித நுால் அவமதிக்கப்பட்டதாக, 'வீடியோ' வெளியானது. அதைத் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

பல கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஹிந்துக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். ரங்க்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஹிந்து இளைஞர், சமூக வலைதளத்தில் அவதுாறு செய்தி வெளியிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அவரது வீட்டுக்கு அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த கிராமத்தில் உள்ள ஹிந்துக்கள் வசித்து வரும் 29 வீடு
களுக்கு, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே வங்கதேசத்தை சேர்ந்த ஒரு ஹிந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2013 ஜனவரியில் இருந்து இதுவரை ஹிந்துக்கள் மீது, 3,679 தாக்குதல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்துக்களுக்கு சொந்தமான 559 வீடுகள், 442 கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஹிந்து கோவில்கள் மீது 1,678 தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Chennai,இந்தியா
21-அக்-202111:50:20 IST Report Abuse
Venkat இந்த சம்பவம் மூலமாக நம் நாட்டு மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ..ஹிந்து பெரும்பான்மையாக இருக்கிற வரை தான் இங்கு அனைத்து மக்களும் அமைதியாக வாழமுடியும் ...ஹிந்து சிறுபான்மை ஆக்கப்பாடால் அழிய போவது ஹிந்து மக்கள் மட்டுமே ..உதாரணம் : கேரளா ,காஷ்மீர் ,மேற்கு வங்காளம் ...
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
22-அக்-202112:12:05 IST Report Abuse
R MURALIDHARANகரெக்ட்...
Rate this:
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
19-அக்-202119:19:09 IST Report Abuse
S.Govindarajan. இந்திரா அன்று போர் மூலம் பங்களாதேஷை பிரித்ததன் பலனை நாம் அனுபவிக்கிறோம்
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
19-அக்-202117:25:39 IST Report Abuse
K.Muthuraj 1970 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சில வரலாற்று சம்பவங்கள்: கிழக்கு வங்கத்தில் மூன்று லட்சம் பேர் வரை (கணக்குகளின்படி) கொல்லப்பட்டனர். கொலை செய்தது - பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உள்ளூர் மக்கள். கணக்கில்லாமல் எவ்வளவு என்று தெரியவில்லை. பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாலேயே மானபங்கம் செய்யப்பட்டனர். நோய்களால் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கணக்கில்லை. இரண்டு கோடிப்பேர் தத்தம் சொத்துக்களை கால்நடைகளை விட்டு மேற்கு வங்கம் நோக்கி அகதிகளாக வந்தனர். இந்திரா காந்தி தான் பிரதமர். பாகிஸ்தானை கண்டிக்கும்படி மேற்கு நாடுகளில் முறையிட்டார். பிரான்ஸ் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகள் அமைதியாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆயுதங்கள் கொடுத்தன. இந்திரா காந்தி ஜெனெரல் மானெக்ஷாவிடம் இந்தியா படைகளை வைத்து நடவடிக்கை எடுக்க கூறினார். ஆனால் அவர் மறுத்து விட்டார் (இடையிலே அரசியல் நடவடிக்கை என்று போரை நிறுத்தி விடுவார்கள் என்பதால். இப்படி பாதி போர் நிறுத்த நடவடிக்கைகளின் காரணங்களால் தான் நேருவினால் சீனாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நம் மண் தாரை வார்க்கப்பட்டது. இன்று வரை மீட்க முடியவில்லை). ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக தனது கப்பல்களை நிறுத்தி மேற்கு நாடுகளின் கப்பல்கள் வரவிடாமல் தடுத்து விட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் இந்திரா காந்தி மானெக்க்ஷஷா விற்கு உறுதியளித்தார் - ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கிழக்கு வங்கம் வரும்வரை அரசியல் நடவடிக்கை கிடையாது என்று. அதன் பின்பே இந்தியா பாகிஸ்தான் யுத்தம் தொடங்கியது. கொடூரங்கள் நிறைந்த காலங்கள் அவை. மானெக்க்ஷஷா சாதுரியமாக சில நாட்களிலே பாகிஸ்தானை தோற்கடித்தார் (நமது ராணுவம் கிழக்கு வங்காளத்திலும் பாகிஸ்தானிலும் ஒரே நேரத்தில் போர் தொடுத்தது - இது பாகிஸ்தான் எதிர்பார்க்காதது) மேற்கு நாடுகள் இந்தியாவினை தனிமைபடுத்தின - என்ன ஒரு நீசத்தனம். அதன் பின்பு ராஜதந்திர நடவடிக்கைகள் தொடங்கின. பங்களாதேஷ் உருவானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X