ஆப்கன் மாணவிகளை பள்ளி செல்ல அனுமதியுங்கள்..!: தாலிபான்களை வலியுறுத்திய மலாலா யூசுப்சாய்| Dinamalar

'ஆப்கன் மாணவிகளை பள்ளி செல்ல அனுமதியுங்கள்..!': தாலிபான்களை வலியுறுத்திய மலாலா யூசுப்சாய்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (2)
Share
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்சியைப் பிடித்தனர். இதனை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பெண்கள் கல்வி ஆர்வலர் மலாலா யூசுப்சாய் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.தாலிபான் பயங்கரவாத அமைப்புகடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது. இதனை அடுத்து

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்சியைப் பிடித்தனர். இதனை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பெண்கள் கல்வி ஆர்வலர் மலாலா யூசுப்சாய் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.latest tamil news
தாலிபான் பயங்கரவாத அமைப்புகடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது. இதனை அடுத்து கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை ஆப்கன் தாலிபான்கள் ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட கடுமையான ஷரியா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் தாலிபான்கள் கடந்த ஆட்சியில் பெண் கல்வி குறித்த கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தற்போது பின்பற்ற போவதில்லை என்று முன்னதாக உறுதிபடத் தெரிவித்து இருந்தனர். இதனால் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்கப்படும் என்று உலக நாடுகள் நினைத்த நேரத்தில் தற்போது தாலிபான்கள் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்கப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் போர் நிலவிய காலத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் மீண்டும் திரும்ப தாலிபான்கள் அனுமதித்துள்ள நிலையில், மாணவிகளுக்கு பள்ளி செல்ல தடை விதித்துள்ளது.


latest tamil newsஇது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் அந்நாட்டில் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று பல சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கத் துவங்கினர். தற்போது நோபல் பரிசு பெற்ற பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசுப்சாய் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலாலா பள்ளி பயிலும்போது தாலிபான்கள் அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து தாலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்தார். தற்போது இடைநிலைப் பள்ளியில் மாணவிகள் பயில தாலிபான்கள் தடை விதித்திருப்பதை அவர் எதிர்த்துள்ளார். மாணவிகள் பள்ளி செல்ல தாலிபான்கள் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இஸ்லாமிய மார்க்கம் பெண்கள் கல்வி பெற தடை விதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஆப்கானிஸ்தான் மட்டுமே தற்போது பெண் கல்வியை மறுத்து வருகிறது. ஜி20 நாட்டு தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வியை ஆதரிக்க நிதி அளிக்குமாறு ஆப்கன் மனித உரிமை ஆணையம் அவசர கடிதம் எழுதியிருந்தது.

இதற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்து இருந்தன. 24 வயதான மலாலா யூசுப்சாய் தான் நடத்திவரும் லாபநோக்கற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஆப்கானிஸ்தான் பெண்கள் கல்விக்காக ஒதுக்கியுள்ளார். இதன்மூலமாக ஆப்கானிஸ்தானில் மாணவிகளும் பள்ளி சென்று பாடம் பயில அவர் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X