எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வைகோ மகனுக்கு கட்சி பதவி கிடைக்குமா?

Updated : அக் 19, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வாரிசுக்கு பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், 15 பேர் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.சென்னையில், ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை நடக்கிறது. அதில் பொருளாளர் மற்றும் துணைப் பொதுச் செயலர் பதவிகளுக்கு, வைகோவின் மகன் துரையை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. 'ம.தி.மு.க., வாரிசு அரசியலை எதிர்த்து
வைகோ மகன், கட்சி பதவி, கிடைக்குமா?

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வாரிசுக்கு பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், 15 பேர் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

சென்னையில், ம.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை நடக்கிறது. அதில் பொருளாளர் மற்றும் துணைப் பொதுச் செயலர் பதவிகளுக்கு, வைகோவின் மகன் துரையை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

'ம.தி.மு.க., வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சி. அதனால், வைகோ மகனுக்கு எந்தப் பதவியும் வழங்கக் கூடாது' என்று திருப்பூரை சேர்ந்த மாநில நிர்வாகி, கோவையை சேர்ந்த இளைஞரணி நிர்வாகி மற்றும் மாவட்ட செயலர்கள் என 15 பேர் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
வைகோ தரப்பில், அவர்களிடம் நடத்திய சமரச பேச்சு தோல்வி அடைந்துள்ளது. அவர்கள் அனைவரும், முதல் கட்ட ரகசிய கூட்டம் நடத்தி, துரைக்கு எதிராக கண்டன அறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இன்று, அதிகாரப்பூர்வமாக கூட்டறிக்கை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், துரைக்கு ஆதரவாக கோஷம் எழுப்பவும், அவருக்கு பதவி வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவும், கட்சி நிர்வாகிகள் பலர் திட்டமிட்டுள்ளனர்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தவும், கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும், தென் மாவட்டங்களில் இருந்து தொண்டர் அணியினர் என்ற பெயரில், குண்டர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-அக்-202121:44:49 IST Report Abuse
sankaseshan நான் அடிக்கற மாதிரி அடிக்கிறேன் நீ அழ ர மாதிரி அழு ,உலக மகா நடிப்புடா சாமி நடிப்பில் அணைத்து கழகங்களும் ஒரே ஸ்டைல்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
19-அக்-202114:25:49 IST Report Abuse
raja கிடைக்கிலென்ன கட்சியே இருக்காதே ... தன்மான தமிழன் சைகோ தில்லுமுல்லு கலகத்தோட இணைச்சிருவாரே....
Rate this:
Cancel
rajj - Thanjavur,இந்தியா
19-அக்-202111:12:46 IST Report Abuse
rajj இப்படி ஒரு கட்சி இருக்கா? அருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X