அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயபாஸ்கரிடம் ரெய்டு: அ.தி.மு.க., கண்டனம்

Updated : அக் 20, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (10+ 10)
Share
Advertisement
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரின் நேற்றைய அறிக்கை:அமைப்பு செயலரும், சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை என்ற பெயரில், தி.மு.க., அரசு தன் பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பது கண்டனத்துக்கு
 விஜயபாஸ்கரிடம் ரெய்டு: அ.தி.மு.க., கண்டனம்

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரின் நேற்றைய அறிக்கை:

அமைப்பு செயலரும், சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை என்ற பெயரில், தி.மு.க., அரசு தன் பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பது கண்டனத்துக்கு உரியது.அ.தி.மு.க., பொன் விழா கொண்டாடி வரும் தருணத்தில், சென்னையிலும், மற்ற பகுதிகளிலும் நடந்த உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத தி.மு.க., விடிந்ததும் காவல் துறையை ஏவிவிட்டு, லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் ஆடுகிறது.

அ.தி.மு.க., ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம். இது, தி.மு.க.,வின் முயற்சிகளால் ஓய்ந்து சாயப்போவது இல்லை.எத்தனை நிர்வாகிகள் மீது, என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், அ.தி.மு.க., எதிர்காலத்தில் அடையப் போகும் வெற்றிகளை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (10+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
19-அக்-202120:46:27 IST Report Abuse
K.n. Dhasarathan ஆனால் ஒரு இடத்தில் கூட விஜய பாஸ்கர் குற்றமற்றவர் என்று சொல்லவில்லை பாருங்கள், அடுத்து, முடிந்தால் எனது அலுவகங்களில் வந்து சோதனை செய்யட்டும், நான் குற்றமற்றவன், நான் எங்குவேண்டுமானாலும் வந்து நிரூபிப்பேன் என்று சொல்வார்களோ ? நடந்தாலும் நல்லதுதான்.
Rate this:
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
19-அக்-202116:44:30 IST Report Abuse
Muthuraj Richard வெட்கம் கெட்டவர்கள்...........கேவலமான விவஸ்தை இல்லாத அறிக்கைகள்.................மக்கள் பணத்தில் சாப்பிட கூச்சப்படாதவர்கள், பாமரனின் வியர்வையில் சுகம் காணும் சுயநலவாதிகள்,காலம் நிச்சயம் இவர்களை உணரவைக்கும்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-அக்-202116:06:55 IST Report Abuse
Sriram V Admk is failing as opposition party. It must come in streets against DMK interference in religious affairs and party leaders interference in police cases
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X