பொது செய்தி

தமிழ்நாடு

தடையற்ற குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய கண்காணிப்பு குழு!வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள திட்டம்

Added : அக் 19, 2021
Share
Advertisement
உடுமலை:வட கிழக்கு பருவ மழை காலத்தில், குடிநீர் திட்டங்கள் தடையில்லாமல் செயல்படவும், குடிநீர் வினியோகத்தை உறுதி செய்யவும், அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு, திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு நான்கு குடிநீர் திட்டங்கள்

உடுமலை:வட கிழக்கு பருவ மழை காலத்தில், குடிநீர் திட்டங்கள் தடையில்லாமல் செயல்படவும், குடிநீர் வினியோகத்தை உறுதி செய்யவும், அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு, திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு நான்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இதில், பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக, நாளொன்றுக்கு, 3.10 எம்.எல்.டி., நீரும், கணக்கம்பாளையம் திட்டத்தில், நாளொன்றுக்கு, 7.4 எம்.எல்.டி., நீரும், மடத்துக்குளம் திட்டத்தில், 11.76 எம்.எல்.டி., குடிநீர் மற்றும் குடிமங்கலம் திட்டத்தில், 9.03 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்படுகிறது.நான்கு திட்டங்களிலிருந்து, நாளொன்றுக்கு, 31.29 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்பட்டு, குடிநீர் வடிகால் வாரிய சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக, சுத்திகரிக்கப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகங்கள் வழியாக வினியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டங்கள் வாயிலாக, தளி, சங்கராமநல்லுார், மடத்துக்குளம், கொமரலிங்கம், கணியூர் பேரூராட்சிகள் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 409 ஊரக குடியிருப்புகளிலுள்ள, 2.50 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.திருமூர்த்தி அணையில், மொத்தமுள்ள, 60 அடியில், 33.82 அடியாக உள்ளது. இதில், குடிநீர் திட்டங்களுக்காக, நாள்தோறும், 21 கன அடி நீர் திறக்கப்படுகிறது.அணையில் நீர் இருப்பு திருப்தியாக இருந்தாலும், பருவ மழை காலங்களில் ஏற்படும் மின் தடை, திட்ட குழாய் அமைந்துள்ள பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிப்பு, உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
சிறப்புக்குழு அமைப்புகுடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் உலகநாதன் கூறியதாவது:வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், குடிநீர் திட்டங்களை பாதிப்பில்லாமல் பராமரிக்கவும், முறையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு குடிநீர் திட்டங்களுக்கும், உதவிப்பொறியாளர், இளம் பொறியாளர், பிட்டர், பராமரிப்பு உதவியாளர் என தொழில் நுட்பக்குழுவினர் மற்றும் தொழிலாளர்களை கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் தொடர்ந்து, 24 மணி நேரமும் குடிநீர் திட்டங்கள் இயங்குவதற்கான கண்காணிப்பு மற்றும் வழியோரங்களில் குடிநீர் குழாய் உடைப்பு, சரி செய்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் ஆய்வு செய்து பழுது ஏற்படாமல் கண்காணித்து, தடையில்லாமல், தரமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவசர காலங்களில், பணி மேற்கொள்ள வேண்டும் என்பதால், இக்குழுவினருக்கு தனி வாகனம் மற்றும் தேவையான மோட்டார்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட இயந்திரங்கள், கட்டுமான பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்கள் செல்வதற்கான வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு குடிநீர் திட்டங்களுக்கும், தலா ஒரு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்திலுள்ள, திருமூர்த்தி அணை, காவிரி ஆறு, கொடுமுடி என குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரங்கள் மற்றும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த, மாவட்ட அளவில் நிர்வாக பொறியாளர் தலைமையில், மேற்பார்வை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் திட்டங்களுக்கு, தடையில்லாமல், மின்சாரம் வினியோகத்தை உறுதி செய்யும் வகையில், மின் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, நிர்வாக பொறியாளர் தெரிவித்தார்.நகராட்சியிலும் தயார்உடுமலை நகராட்சிக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 8.85 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 33 வார்டுகளில் வசிக்கும், 65 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அதிகாரிகள் கூறுகையில்,' பருவ மழை காலங்களில், தடையற்ற குடிநீர் வினியோகம் மேற்கொள்ள ஜெனரேட்டர், மின் மோட்டார்கள் மற்றும் குழாய் உடைப்புகளை சரி செய்ய தேவையான உபகரணங்கள், தொழிலாளர்கள் தயார் நிலையில் உள்ளதோடு, குடிநீரில் கலக்கப்படும் குளோரினேசன் பணியையும் முறையாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X