கள்ளக்காதலை கைவிட மறுத்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது

Added : அக் 19, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
பரமக்குடி-கள்ளக்காதலை கைவிட மறுத்த மகளை பெற்றோரே கொலை செய்து எரித்து விட்டனர். ராமநாதபுரம் அருகேயுள்ள செவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ், 30. இவருக்கும் பரமக்குடி அருகே நண்டுபட்டியை சேர்ந்த தென்னரசு, 58 - அமிர்தவள்ளி, 48 என்பவரின் மகள் கவுசல்யா, 22 என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இந்நிலையில் கவுசல்யா தன் பள்ளி, கல்லுாரி கால நண்பரான பார்த்திபனை
 கள்ளக்காதலை கைவிட மறுத்த மகளை கொலை செய்து எரித்த பெற்றோர் கைது

பரமக்குடி-கள்ளக்காதலை கைவிட மறுத்த மகளை பெற்றோரே கொலை செய்து எரித்து விட்டனர். ராமநாதபுரம் அருகேயுள்ள செவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ், 30. இவருக்கும் பரமக்குடி அருகே நண்டுபட்டியை சேர்ந்த தென்னரசு, 58 - அமிர்தவள்ளி, 48 என்பவரின் மகள் கவுசல்யா, 22 என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கவுசல்யா தன் பள்ளி, கல்லுாரி கால நண்பரான பார்த்திபனை சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரத்தில் சந்தித்தார். மதுரையில் போலீசாக பணியாற்றும் பார்த்திபன் அப்போது கவுசல்யாவின் அலைபேசி எண்ணை வாங்கியுள்ளார். அடிக்கடி இருவரும் பேசி வந்தனர். இதை கனகராஜ் கண்டித்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் பார்த்திபனுடன் குடும்பம் நடத்தினார். இதுகுறித்த புகார்படி, சத்திரக்குடி போலீசார் கவுசல்யாவை அழைத்து வந்து எச்சரித்து சிறிது காலம் பெற்றோருடன் இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பினர்.

பெற்றோர் வீட்டிலும் தன் கள்ளக்காதலனுடன் தொடர்ந்து பேசி வந்தார். பெற்றோர் கண்டித்ததால் கவுசல்யா 16ம் தேதி எலி மருந்து தின்று பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கிருந்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின் கவுசல்யா மீண்டும் எலி மருந்து தின்று இறந்து விட்டதாக கூறி, போலீசாருக்கு தெரியாமல் உடலை எரித்தனர்.

சத்திரக்குடி போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் கவுசல்யாவின் தாய், தந்தை ஆகியோர் கவுசல்யாவை வாய், மூக்கை பொத்தி மூச்சை திணறடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
25-அக்-202123:23:01 IST Report Abuse
Akash kanagaraj is the cause...he could not please his wife..there should be an IPC section for this
Rate this:
Cancel
Citizen_India - Woodlands,இந்தியா
23-அக்-202116:47:29 IST Report Abuse
Citizen_India இவர்கள் மகளை கொன்றது சரியே
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
22-அக்-202116:28:16 IST Report Abuse
Soumya ஹாஹாஹா இது சொரியார் மண்ணுடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X