சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.45 கோடி மோசடி: வங்கி மேலாளர் கைது

Added : அக் 19, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--மத்திய கூட்டுறவு வங்கியில் போலிஆவணங்கள் தயார் செய்து, 1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த மேலாளர், உதவி மேலாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பூரணச்சந்திரமதி 48, மேலாளராக பணி புரிந்தார். சத்தியமூர்த்தி, 41, காசாளராகவும், சுந்தரகாளீஸ்வரி, 45, உதவி மேலாளராகவும்

ராமநாதபுரம்--மத்திய கூட்டுறவு வங்கியில் போலிஆவணங்கள் தயார் செய்து, 1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த மேலாளர், உதவி மேலாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பூரணச்சந்திரமதி 48, மேலாளராக பணி புரிந்தார். சத்தியமூர்த்தி, 41, காசாளராகவும், சுந்தரகாளீஸ்வரி, 45, உதவி மேலாளராகவும் பணிபுரிந்தனர்.இவர்கள் கூட்டுச்சேர்ந்து போலியாக 76 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு, சேமிப்பு கணக்குகள், போலிஆவணங்களை தயார் செய்தனர். இவற்றை பயன்படுத்தி 2012 ஜனவரி முதல் 2018 மார்ச் வரை 1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியதாக கணக்கு எழுதி பணத்தை மோசடி செய்து உள்ளனர்.

மூவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். கூட்டுறவு துணை பதிவாளர் கோவிந்தராஜன் புகார்படி வணிகவியல் குற்ற புலனாய்வுபிரிவு போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர். 22 லட்சத்து 57ஆயிரத்து 269 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X