கடலுார்-ஓய்வு பெற்ற துணை கலெக்டரை, போதைக்கு அடிமையான மகனே இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது
.கடலுார், ஆனைக்குப்பம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 75; ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரிலும், மகள் அமெரிக்காவிலும் உள்ளனர். மற்றொரு மகன் சென்னையில் உள்ளார். இவருடன் இரட்டையராக பிறந்த இன்ஜினியர் கார்த்திக், 32, தந்தையுடன் வசித்து வந்தார். சுப்ரமணி, கார்த்திக் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலையும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கார்த்திக், சுப்ரமணியின் கை, கால்களை இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கி விட்டு அறைக்குள் சென்று விட்டார். பலத்த காயமடைந்த சுப்ரமணி மயங்கி விழுந்தார். மாலை 4:00 மணிக்கு மீண்டும் தந்தையை வந்து பார்த்த போது இறந்து கிடந்தது தெரிந்தது. பிரீசர் பெட்டியில் தந்தை உடலை வைக்க, ஆம்புலன்ஸ் ஊழியரிடம் தகவல் தெரிவித்தார். ஊழியர்கள் வந்து பார்த்த போது, சுப்ரமணி அடித்துக் கொல்லப்பட்டது தெரிந்தது.கடலுார், புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். இதில், திருமணமாகாத அவர் மது போதைக்கு அடிமையானவர். குடிக்க பணம் கேட்டு தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்வார்.
நேற்று பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்தார். சுப்ரமணி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், இரும்பு பைப்பால் தந்தையை அடித்துக் கொன்றது தெரிந்தது. கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.போதையின் உச்சம்கார்த்திக் மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி, வீட்டின் ஒரு அறையில் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். மது அருந்தி விட்டு ஆயிரக்கணக்கான காலி மதுபாட்டில்கள், சிகரெட்டுகளையும் அறைக்குள் குவித்து வைத்துஉள்ளார். அந்த அறைக்குள்ளே படுத்தும் உறங்கிஉள்ளார். அறை முழுதும் காலி மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்த போலீசார் அதிர்ச்சிஅடைந்தனர்.
போதையின் உச்சம்கார்த்திக் மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி வீட்டின் ஒரு அறையில் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். மது அருந்தி விட்டு ஆயிரக்கணக்கான காலி மதுபாட்டில்கள், சிகரெட்டுகளையும் அறைக்குள் குவித்து வைத்துள்ளார். அந்த அறைக்குள்ளே படுத்தும் உறங்கியுள்ளார். அறை முழுதும் காலி மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE