பொது செய்தி

இந்தியா

மழை நீரையும் கர்நாடகா கணக்கில் சேர்ப்பு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை-கர்நாடக அணைகளில் திறக்கப்படும் காவிரி நீருடன் மழை நீரையும் சேர்த்து, நிலுவை நீர் கழிக்கப்படுவதால், பொதுப்பணித்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டி.எம்.சி.,யாக, 2018ல், உச்சநீதிமன்றம்

சென்னை-கர்நாடக அணைகளில் திறக்கப்படும் காவிரி நீருடன் மழை நீரையும் சேர்த்து, நிலுவை நீர் கழிக்கப்படுவதால், பொதுப்பணித்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



latest tamil news


தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டி.எம்.சி.,யாக, 2018ல், உச்சநீதிமன்றம் குறைத்து விட்டது. மத்திய நீர்வளத்துறையின் பிலிகுண்டுலு நீரளவை தளத்தில் இருந்து, 150 கி.மீ.,க்கு அப்பால், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. பிலிகுண்டுலு நீரளவை தளத்தில் இருந்து 50 கி.மீட்டரில், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீர், காவிரியில் வந்து கலக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்.
ஆனால், பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து வரும் நீர், கர்நாடகாவின் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு நடப்பாண்டில், 30 டி.எம்.சி., நிலுவை நீரை திறக்க கர்நாடக அரசிற்கு, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., அணைக்கும், கபினி அணைக்கும், பிலிகுண்டுலு நீரளவை தளத்திற்கும் இடைப்பட்ட வனப்பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடகா திறந்துள்ள நீரை காட்டிலும் அதிகப்படியான மழை நீர், பிலிகுண்டுலு நீரளவை தளத்திற்கு வருகிறது. இந்த மழைநீரும் கர்நாடகா வழங்கும் கணக்கில் சேர்க்கப்பட்டு நிலுவை நீர் கழிக்கப்படுகிறது. இதனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


latest tamil news


. இப்பிரச்னையை, காவிரி தொழிற்நுட்ப பிரிவு மற்றும் அரசின் புதிய வழக்கறிஞர்கள் குழுவின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இம்மாத இறுதியில் நடக்கவுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், இது குறித்து முறையிடவும் திட்டமிட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202113:00:07 IST Report Abuse
ஆரூர் ரங் அணைகளிலிருந்து மட்டுமே 177 TMC என்பது தவறு. தமிழக எல்லையில்🙄 பிலிகுண்டுவில் எவ்வளவு நீர் வரத்து என்பதே தீர்ப்பு
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-அக்-202109:07:51 IST Report Abuse
duruvasar ஏங்க, மத்திய அரசின் உதவி திட்டங்களுக்கு நாம் ஸ்டிக்கர் ஒட்டிக்கும்போது அதிர்ச்சி வரவில்லையா.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19-அக்-202108:22:18 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எவ்வளவு கொடுத்தால் என்ன கடைசியில் கடலில் தான் விடுவீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X