வன்முறை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறிய டில்லி போலீசாருக்கு ரூ 25 ஆயிரம் அபராதம்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-டில்லி வன்முறை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவை, நீதிமன்றம் கடுமையாக சாடியதுடன், டில்லி போலீசாருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.டில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது வன்முறைகள் அரங்கேறின; அதில் 53 பேர் உயிரிழந்தனர்.எப்.ஐ.ஆர்.,அப்போது ஐந்து

புதுடில்லி-டில்லி வன்முறை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவை, நீதிமன்றம் கடுமையாக சாடியதுடன், டில்லி போலீசாருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.



latest tamil news


டில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது வன்முறைகள் அரங்கேறின; அதில் 53 பேர் உயிரிழந்தனர்.எப்.ஐ.ஆர்.,அப்போது ஐந்து இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. எனினும், அவற்றை சேர்த்து ஒரே எப்.ஐ.ஆர்., ஆக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தனித்தனியாக பிரித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வாரம் தலைமை பெருநகர நீதிபதி அருண்குமார் கார்க் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதில் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை மற்றும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.


latest tamil news


விசாரணை

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை ஒத்திவைக்க கோரிய டில்லி போலீசுக்கு, நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய டில்லி போலீஸ் கமிஷனர் அஸ்தானாவை நீதிமன்றம் கடுமையாக சாடியது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-அக்-202111:29:44 IST Report Abuse
Rasheel அட அறிவாளிகளா? குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது ஒரு IPS அதிகாரி முரட்டு மூர்க்க பெண்களால் அடிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தாரே அவருக்கு நியாயம் கிடையாதா? போலீஸ்காரன் உயிர் மட்டும் மலிவானதா? பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் எரிக்கப்பட்டதே அதற்கு என்ன நிவாரணம் செகுலர் கனவான்களே?
Rate this:
Cancel
19-அக்-202109:41:12 IST Report Abuse
அப்புசாமி மடத்தனம். போலுசாருக்கு தனியாக ஏதாவது பணம் இருக்கா? மக்ஜள் வரிப்பணம் தானே போகப்போகுது. முடிஞ்சா அஸ்தானாவின் சம்பளத்திலிருந்து வசூல் பண்ணுங்க பாக்கலாம். அவர்தானே நடவடிக்கை எடுக்கத் தவறினார்.
Rate this:
Cancel
19-அக்-202109:38:30 IST Report Abuse
அப்புசாமி சபாஷ்... 25 ஆயிரத்தை கறாராக வசூல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுக்கு பாஞ்சி லட்சமாபங்கு பிரிச்சுக் குடுத்துருங்க. பணம் மீதி இருந்தா பி.எம்.கேர்ஸுல சேத்துடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X