மும்பை,-'புலனாய்வு அமைப்புகள் வாயிலாக ஆளுங்கட்சி தலைவர்களை மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினருக்கும் தொல்லை கொடுப்பது, மத்திய பா.ஜ., அரசின் மனிதாபிமானமற்ற முகத்தை காட்டுகிறது' என, சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

நடவடிக்கைமஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்.,- காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு லஞ்ச ஊழல், சட்ட விரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்டகுற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக் உள்ளிட்டோர் மீது, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் 'சாம்னா' பத்திரிகை வெளியிட்டு உள்ள செய்தி:சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, போதை மருந்து தடுப்பு துறை என, அனைத்து அமைப்புகளையும் சிவசேனா மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எதிராக மத்திய பா.ஜ., அரசு திருப்பிவிட்டு உள்ளது.நம்பிக்கைகுற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதில் தவறில்லை.

ஆனால் அவர்களின் குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுக்கப்படுகிறது. இது, பா.ஜ.,வின் மனிதாபிமானமற்ற முகத்தை காட்டுகிறது. பா.ஜ.,வுக்கும், மத்திய அரசுக்கும் ஜனநாயகம், அரசியல் சாசனம், சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. கேள்வி கேட்பது பா.ஜ.,வுக்கு பிடிக்காது.
அதை மீறி கேள்வி கேட்பவர்களை, பா.ஜ., இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுகிறது. மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான நடவடிக்கைகளை பா.ஜ., மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE