தமிழ்நாடு

இந்தியா - இஸ்ரேல் ஒற்றுமை மத்திய அமைச்சர் பாராட்டு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஜெருசலம் :''பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா - இஸ்ரேல் நாடுகளிடம் ஒற்றுமை உள்ளது,'' என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐந்து நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஒற்றுமை அவர், ஜெருசலமில் இந்திய - யூத சமூகத்தினரின் கூட்டத்தில்
இந்தியா - இஸ்ரேல் ஒற்றுமை மத்திய அமைச்சர் பாராட்டு

ஜெருசலம் :''பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா - இஸ்ரேல் நாடுகளிடம் ஒற்றுமை உள்ளது,'' என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐந்து நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.


ஒற்றுமைlatest tamil news
அவர், ஜெருசலமில் இந்திய - யூத சமூகத்தினரின் கூட்டத்தில் பேசியதாவது:ந்தியா - இஸ்ரேல் இடையே பல நுாற்றாண்டுகளாக தொப்புள் கொடி உறவு உள்ளது. இந்தியாவும், இஸ்ரேலும் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையின் மாண்பை காத்து வருகின்றன.
பண்டைய கலாசார தத்துவங்களில் சிலவற்றை பின்பற்றுவதிலும், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை உள்ளது. இந்தியா 'வசுதேவ குடும்பகம்' என்ற தத்துவத்தை பின்பற்றி, உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கைப்படி நடக்கிறது. இஸ்ரேல், 'டிகுன் ஓலம்' என்ற தத்துவப்படி உலக மக்களை சுகப்படுத்தும் கொள்கையை பின்பற்றுகிறது.
இரு நாடுகள் இடையே பலவித வளர்ச்சிகளுடன், தீவிரவாதம் முதல் பயங்கரவாதம் வரையிலான சவால்களை சந்திப்பதிலும் ஒற்றுமை உள்ளது.
பயங்கரவாத தடுப்பு தொடர்பான புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள, இரு நாடுகளும் இணைந்து குழு அமைத்துள்ளன. மும்பையின் சசூன் படகுத் துறை, புனேவின் சசூன் மருத்துவமனை ஆகியவை டேவிட் சசூன் என்ற யூதரால் உருவானவை.
இவ்வாறு அவர் பேசினார்.


பெயர் பலகை திறப்புகடந்த 1960ல் சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சர்வோதய இயக்கத்தினர், இஸ்ரேலின் ஜெருசலம் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டனர்.
இப்பகுதி, 'பூமிதான தோப்பு' என அழைக்கப்படுகிறது. இதன் பெயர் பலகையை, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202109:36:02 IST Report Abuse
அப்புசாமி சீக்கிரமேவ சில ஆயிரம் கோடிக்கு ராணுவ ஆர்டர்கள் இஸ்ரேலுக்கு ப்ராப்தி ரஸ்து. அதுசரி, 1960 ல நட்ட மரங்களுக்கு இன்னிக்கி பெயர்ப்பலகை திறப்பு விழாவா? எதை எதையோ தூசி தட்டி தொறந்து வெக்கிறாங்க.
Rate this:
Anand - chennai,இந்தியா
19-அக்-202112:05:37 IST Report Abuse
Anandஅட கூறுகெட்ட ......, அப்படி ஆர்டர் கொடுத்து கமிஷன் அடிக்க இது ஒன்றும் உன்னோட இத்தாலி மாபியாக்கள் ஆட்சி கிடையாது, இந்திய மண்ணின் மைந்தன் மோடி ஆட்சி, இன்னும் நீ மயக்கத்தில் இருந்து மீளவில்லையா?...
Rate this:
Cancel
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
19-அக்-202107:13:10 IST Report Abuse
Palanivelu Kandasamy இன்றைய பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ இந்த அளவுக்கு வளர இஸ்ரேல் தந்த பயிற்சி தானே காரணம் . இதனை ஆரம்பக் காலத்தில் 'Illustrated Weekly' இதழ் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தது.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
19-அக்-202105:36:31 IST Report Abuse
SUBBU இஸ்ரேலின் உளவுத் துறையான MOSSAD ஐ போல் இந்தியாவின் RAW ம் வளர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X