இந்தியா

சீன அச்சுறுத்தலை சமாளிக்க அருணாச்சல் எல்லையில் வேகமெடுக்கும் பணிகள்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021
Share
Advertisement
ரூபா : நம் அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு மே மாதத்தில் கிழக்கு லடாக்குக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின.இதையடுத்து எல்லையில் இரு நாட்டுப் படைகளும்
சீன அச்சுறுத்தல்,  அருணாச்சல் எல்லை, பணிகள்

ரூபா : நம் அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டு மே மாதத்தில் கிழக்கு லடாக்குக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின.இதையடுத்து எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சுக்குப் பின் சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்பட்டன.இந்த சூழ்நிலையில் எதிர்காலத்தில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், எல்லையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


latest tamil news


அதன் ஒரு பகுதியாக அருணாச்சலப் பிரதேசத்திலும் மிக பிரமாண்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை வசதிகளுடன், 20 இடங்களில் பாலங்கள், சுரங்கப் பாதைகள், விமானம் தரையிறங்கும் வசதி என கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.''சீனாவின் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நம் ராணுவம் தயாராக உள்ளது. எல்லைக்கு மிக விரைவாக ராணுவம் செல்லும் வகையில் இந்தக் கட்டுமானங்கள் வேகமாக நடந்து வருகின்றன,'' என, எல்லை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும், ராணுவத்தின் 5வது மலைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜூபின் மின்வாலா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X