பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: நினைவுக்கு வரும் எம்.ஜி.ஆரின் பேச்சு!

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:உடுமலை அரசு மருத்துவமனையில் ராஜேஸ்வரி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி, 'குழந்தை இறந்து விட்டது. அது, தானாகவே வெளியில் வந்து விடும்' என கூறியிருக்கிறார்.நான்கு
இது, உங்கள், இடம், எம்.ஜி.ஆர்., பேச்சு


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்



சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

உடுமலை அரசு மருத்துவமனையில் ராஜேஸ்வரி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி, 'குழந்தை இறந்து விட்டது. அது, தானாகவே வெளியில் வந்து விடும்' என கூறியிருக்கிறார்.நான்கு நாட்கள் ஆகியும், அந்த பெண்ணுக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை.

பின், தனியார் மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை கூறியுள்ளார்.அங்கு சென்று, 'அட்மிட்' ஆனதும், அதே டாக்டர் ஜோதிமணி வந்து சிகிச்சை அளித்துள்ளார். அதற்காக அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், அந்த பெண்ணிடம் 40 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளது.இது குறித்து, திருப்பூர் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், டாக்டர் ஜோதிமணி, நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படி தெரிந்தே தவறு செய்தவரை, வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்தால், அதற்கு பெயர் தண்டனையா?உடுமலையில் செய்ததை தான், கூடலுாரிலும் பின்பற்ற போகிறார். அவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை. அப்படி செய்தால் தானே, பிறருக்கும் அச்சம் ஏற்படும்.

குற்றச்சாட்டுக்கு ஆளாகி இடமாற்றம் பெறும் அரசு ஊழியர்கள், சில மாதங்கள் சென்றபின் அரசியல்வாதி அல்லது உயர் அதிகாரிகளை பிடித்து, மீண்டும் பழைய இடத்திற்கே மாறுதல் வாங்கி வந்து விடுவர்.அரசு ஊழியரால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன நிவாரணம்?


latest tamil news


தனியார் மருத்துவமனைக்கு செலுத்திய தொகையை, டாக்டர் ஜோதிமணியிடமே வசூல் செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்; அது தான் நியாயம்.எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, அவர் பேசியது இப்போது நினைவுக்கு வருகிறது...'மக்களின் வரிப் பணத்தில் இருந்து தான், ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகிறது; இதை, மருத்துவர்கள் உணர வேண்டும்' என்றார்.

மக்கள் பணத்தில் டாக்டர் பட்டம் பெற்று, ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்க்க மறுக்கும் நபரிடம், அவர்களது படிப்பிற்கு அரசு செய்த தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
19-அக்-202123:23:56 IST Report Abuse
Mohan ஜோதிமணி எம்.பி.தான் சரி இல்லை என்றால் ஜோதிமணி எம்.பி.பி.எஸ் சும் சரியில்ல.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-202120:41:44 IST Report Abuse
 rajan யாருக்கும் வெட்கம் இல்லை, மனசாட்சியும் இல்லை.
Rate this:
Cancel
19-அக்-202119:57:36 IST Report Abuse
பேசும் தமிழன் அரசு பள்ளிகள் என்றால் இளக்காரமாக பார்க்கும் மக்கள்... மருத்துவ கல்வி மட்டும் அரசு கல்லூரிகளில் பயில ஆசைப்படுவது ஏன்??... அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்... அப்போது தான்... அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித்தரம் உயரும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X