பெண் கொலை: தோழி உட்பட 4 பேர் கைது; இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்சத்துணவு ஊழியர் பள்ளியில் தற்கொலைகும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, ராக்கம்பாளையம் கிராமத்தில் வசித்தவர் ரமேஷ் மனைவி நதியா, 35. ராக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, பள்ளி வளாகத்தில் உள்ள புங்கன் மரத்தில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். போலீசார்,


தமிழக நிகழ்வுகள்
சத்துணவு ஊழியர் பள்ளியில் தற்கொலைகும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே, ராக்கம்பாளையம் கிராமத்தில் வசித்தவர் ரமேஷ் மனைவி நதியா, 35. ராக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, பள்ளி வளாகத்தில் உள்ள புங்கன் மரத்தில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.latest tamil news
போலி வருமான வரித்துறை அதிகாரி குண்டர் சட்டத்தில் கைதுராணிப்பேட்டை : ஆற்காடு தொழில் அதிபரிடம், போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கண்ணன், 55. தொழில் அதிபர். இவரது வீட்டிற்கு கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி வருமான வரித்துறையினர் போல நடித்து மர்ம நபர்கள் 6 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றனர். ஆற்காடு போலீசார் சிவானந்தம் நகரை சேர்ந்த எழில், 25, பரத், 23, சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து வந்த யாதவ், 45, உள்ளிட்ட ஆறு பேர்களை ஆக., மாதம் 5 ம் தேதி கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை ஆதம்பாக்கம் எல். எச்., நகரை சேர்ந்த நரேந்திரநாத், 42, என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் இதற்கான நகலை சிறையில் உள்ள அவரிடம் இன்று வழங்கினர்.


ஜாமினில் நகை திருட்டு: மதுரை வாலிபர் கைதுகோவை:கோவை மாநகரில், தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினர் ராஜவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகிக்கும் வகையில் சுற்றிய நபரை பிடித்து விசாரித்தனர்.அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன. விசாரணையில், மதுரை, கோரிபாளையத்தை சேர்ந்த செல்வராஜ்,28 என்பதும் கூலி தொழிலாளி என்பதும், செல்வபுரத்தில் வரதராஜன் என்பவர் வீட்டில் திருடிய, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை விற்பனை செய்ய வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் இருந்த பத்து பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் ஏற்கனவே செல்வபுரத்தில் சரவண அசோக்குமார்,53, என்பவர் வீட்டில், 20 பவுன் நகைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கில் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டவர், கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் நகை திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அவரை செல்வபுரம் போலீசில் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.latest tamil news
பெண் கொலை: தோழி உட்பட 4 பேர் கைதுதஞ்சாவூர் : பள்ளி தோழியை கொலை செய்த சக தோழி அவரது கணவர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாளைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி அனிதா, 30. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. டேவிட் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் அனிதா மாயமானார். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப் பட்டுள்ளதாக, திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அனிதாவை கொலை செய்தது, அவரது எதிர்வீட்டில் உள்ள கார்த்திக், 31, என்பது தெரிந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், அனிதாவும், கார்த்திக்கின் மனைவி சத்யாவும், 28, பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். ஒரே ஊரில் திருமணம் செய்துள்ளதால் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். சத்யாவின் வீட்டுக்கு அனிதா அடிக்கடி சென்று வந்துள்ளார். தன் கணவர் பணம் அனுப்பியது தொடர்பாக கூறியுள்ளார். இதையடுத்து அனிதாவிடம் நைசாக பேசி, சத்யா, கார்த்திக் இருவரும், பல லட்ச ரூபாய் பணத்தையும், 10 சவரன் நகைகளையும் வாங்கியுள்ளனர்.

தன் கணவர் வெளிநாட்டில் இருந்து ஓரிரு மாதங்களில் திரும்ப உள்ளதால், கொடுத்த நகை, பணத்தை சத்யா, கார்த்திக்கிடம் அனிதா கேட்டுள்ளார். பணம் தர விரும்பாத சத்யா, அனிதாவை கொலை செய்ய திட்டமிட்டு, தன் வீட்டுக்கு வரச்சொல்லி உள்ளார். வீட்டுக்கு வந்த அனிதாவை, சத்யா, கார்த்திக், சத்யாவின் சகோதரர் சரவணன், 30, மாமனார் ரங்கநான், 60 ஆகிய நான்கு பேரும் அனிதாவை அடித்து கொலை செய்தனர். பின் ஐந்து கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டனர். இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.


திருநங்கைகளிடம் தகராறு: ஐந்து பேர் கைதுபெ.நா.பாளையம்,:துடியலுார் அருகே கவுண்டம்பாளையத்தில் திருநங்கைகளிடம் தகராறு செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.கவுண்டம்பாளையம் பகுதியில் திருநங்கைகள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்கள் சிலர், அவர்களிடம் தகராறு செய்தனர். இதை அப்பகுதியை சேர்ந்த மகாலிங்கம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மகாலிங்கத்தை தாக்கி, அவரிடம் இருந்த பணத்தை பறித்தது. இதுகுறித்து, துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாலிங்கம் மற்றும் திருநங்கைகளிடம் தகராறு செய்த மகேஷ்குமார், 27, மகேஷ், 32, பழனி,30, பரமசிவம், 29, பிரவீன்குமார், 30 ஆகியோரை கைது செய்தனர்.


மாஜி' துணை கலெக்டர் கொலை; போதை மகன் வெறிச்செயல்கடலுார் : ஓய்வு பெற்ற துணை கலெக்டரை, போதைக்கு அடிமையான மகனே இரும்பு பைப்பால் அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது

கடலுார், ஆனைக்குப்பம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 75; ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரிலும், மகள் அமெரிக்காவிலும் உள்ளனர். மற்றொரு மகன் சென்னையில் உள்ளார். இவருடன் இரட்டையராக பிறந்த இன்ஜினியர் கார்த்திக், 32, தந்தையுடன் வசித்து வந்தார். சுப்ரமணி, கார்த்திக் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலையும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த கார்த்திக், சுப்ரமணியின் கை, கால்களை இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கி விட்டு அறைக்குள் சென்று விட்டார். பலத்த காயமடைந்த சுப்ரமணி மயங்கி விழுந்தார். மாலை 4:00 மணிக்கு மீண்டும் தந்தையை வந்து பார்த்த போது இறந்து கிடந்தது தெரிந்தது. பிரீசர் பெட்டியில் தந்தை உடலை வைக்க, ஆம்புலன்ஸ் ஊழியரிடம் தகவல் தெரிவித்தார். ஊழியர்கள் வந்து பார்த்த போது, சுப்ரமணி அடித்துக் கொல்லப்பட்டது தெரிந்தது. கடலுார், புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news
இந்திய நிகழ்வுகள்
ஒடிசா வாலிபர் கொலைதிருப்பூர்: ஒடிசாவை சேர்ந்தவர் அபினேஷ் கவுடா, 22. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, இவர் திருப்பூர் முத்தணம்பாளையத்தில் தங்கி காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அதே நிறுவனத்தில், ஒடிசாவை சேர்ந்த அஜய் மண்டல், 28 என்பவர் வேலை செய்து வந்தார்.கடந்த, 14ம் தேதி இரவு, மதுபோதையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அதில், அபினேஷ் கவுடாவை, அஜய் மண்டல் தாக்கினார். இச்சூழலில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அபினேஷ் கவுடா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, அடிதடி வழக்கை, கொலை வழக்காக நல்லுார் போலீசார் மாற்றம் செய்துள்ளனர். அஜய் மண்டல் கைது செய்யப்பட்டார்.


உ.பி., நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கொலைலக்னோ-உத்தர பிரதேசத்தில் ஷாஜஹான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஷாஜஹான்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, அங்கு ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அருகே நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கிடந்தது.

இது குறித்து, ஷாஜகான்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் கூறியதாவது:சம்பவம் பற்றி முழு விபரங்கள் தெரியவில்லை. குண்டு பாய்ந்து இறந்தவர் பெயர் பூபேந்திர சிங். வங்கி வேலையில் இருந்த அவர், நான்கு ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். தடய அறிவியல் நிபுணர்களின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவை கிடைத்த பின் தான், நடந்த சம்பவம் பற்றி தெளிவாக கூற முடியும் .இவ்வாறு அவர் கூறினார்.


தீ விபத்தில் இருவர் பலிசூரத்: குஜராத்தின் சூரத் நகரில், ஐந்து மாடி கட்டடத்தில் செயல்படும் தனியார் 'பேக்கேஜிங்' நிறுவனத்தில் நேற்று திடீரென தீப்பற்றியது. மாடியில் இருந்த தொழிலாளர்களில் ஒருவர் தண்ணீர் குழாயை பிடித்து கீழே வர முயன்றபோது தவறி விழுந்து பலியானார்; மற்றொருவர் புகையால் மூச்சுத்திணறி இறந்தார்.தீயணைப்பு படையினர் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்ததுடன், 145 தொழிலாளர்களை மீட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


யானை தாக்கி வாலிபர் மரணம்கோர்பா: சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டம் தொண்டாகான் கிராமத்தைச் சேர்ந்த புதையா சாய், 28, என்பவர் அருகில் உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அவரை யானை தாக்கியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; வழியிலேயே அவர் பலியானார். சத்தீஸ்கரில் கடந்த மாதம் மட்டும் 12 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X