'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம்?

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜெனீவா-இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் அடுத்த வாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் - வி உட்பட ஆறு தடுப்பூசிகளுக்கு

ஜெனீவா-இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் அடுத்த வாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news


தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் - வி உட்பட ஆறு தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார நிறுவனத்திடம் அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரம் வழங்கும்படி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.


latest tamil news


இது குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், 'டுவிட்டரில்' வெளியிட்டு உள்ள தகவல்:பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசி ஆய்வு தொடர்பான அனைத்து தகவல்களையும் உலக சுகாதார நிறுவனத்திடம் அளித்துள்ளது. அவை இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளன. வரும் 26ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். இது போன்ற அங்கீகாரத்தை தகுதி வாய்ந்த அனைத்து தடுப்பூசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கம். இதனால் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் நிலை உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

.கடந்த ஏப்., முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்தால், அதன் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bairav Kumar - Chennai,இந்தியா
19-அக்-202107:50:13 IST Report Abuse
Bairav Kumar அமெரிக்கா கண்டுபிடிப்பான பைசர் 54 சதவிகிதம்தான் வினைத்திறன் உள்ளது, பைசர் தடுப்பு மருந்தின் ஆற்றல் ஆறுமாதத்திற்கு பின் போய்விடுகிறது என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது. சீனாவின் சீனவாக் சைனோபார்ம் ஊசிகளை போட்டால் எழுபது சதவிகிதம் பேருக்கு கொரோனா வருகிறது என மலேசிய, இந்தோனேசிய அரசுகள் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் கோவிஷீல்டு , கோவாக்ஸின் மட்டுமே 85 சதவிகிததிற்கு மேல் நல்ல வினைத்திறனுடன் செயல்பட்டு மனித உடலுக்கு தேவையான மரு உருவாக்க கொரோனா எதிர்ப்பு சக்தியை தருகிறது. இவளவு அருமையான தரமான , மலிவு விலையில் உள்ள இந்திய கோவாக்ஸினை அங்கீகரிக்க உங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு தடங்கல். அந்த தடங்களை கொடுப்பது யார், சீனவா அல்லது ஜார்ஜ் சோரோஸ் முக்கிய பங்குதாரராக இருக்கும் பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒண்ணுக்கும் உதவாத தடுப்பு மருந்தை தயாரிக்கும் மருந்து மாபியாக்களா? நமது பிரதமர் மோடி அவர்களின் தலைமையத்துவத்தில் இந்தியா சொந்த தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை என்றால் அமெரிக்கா அரசு பல கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்தியாவையே எழுதி வாங்கியிருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன மேடம், உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை அனைத்தும் முன்பு அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இந்த மூன்றும் சீன கொடுக்கும் பணத்திற்கு மகுடி வாசிக்கிறது என்ற உண்மையை மனசாட்சியோடு நீங்கள் மறுக்க முடியுமா மேடம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X