கோவாக்சின் தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம்?| Dinamalar

'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அங்கீகாரம்?

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (1)
Share
ஜெனீவா-இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் அடுத்த வாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் - வி உட்பட ஆறு தடுப்பூசிகளுக்கு

ஜெனீவா-இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் அடுத்த வாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news


தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் - வி உட்பட ஆறு தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார நிறுவனத்திடம் அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரம் வழங்கும்படி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.


latest tamil news


இது குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், 'டுவிட்டரில்' வெளியிட்டு உள்ள தகவல்:பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பூசி ஆய்வு தொடர்பான அனைத்து தகவல்களையும் உலக சுகாதார நிறுவனத்திடம் அளித்துள்ளது. அவை இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளன. வரும் 26ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். இது போன்ற அங்கீகாரத்தை தகுதி வாய்ந்த அனைத்து தடுப்பூசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கம். இதனால் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் நிலை உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

.கடந்த ஏப்., முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்தால், அதன் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X