கொக்கையாறு நிலச்சரிவில் மாயமான ஏழு வயது சிறுவன் உடல் மீட்பு | Dinamalar

கொக்கையாறு நிலச்சரிவில் மாயமான ஏழு வயது சிறுவன் உடல் மீட்பு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (1)
Share
மூணாறு : கேரளா, இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுகாவில் கொக்கையாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் ஏழு வயது சிறுவன் சச்சுஷாகுல் உடல் நேற்று மீட்கப்பட்டது.அங்கு அக்.,16ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு வீடுகள் காணாமல் போயின.அதில் ஷியாத் மனைவி பவுஷியா 28, மகன் அமீன்ஷியாத் 10, மகள் அம்னா 7, மற்றும் பைஷல் மகள் அப்ஷால் 8, மகன் அபியான் 4, ஷாஜி 55, ஷாகுல் மகன்

மூணாறு : கேரளா, இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுகாவில் கொக்கையாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் ஏழு வயது சிறுவன் சச்சுஷாகுல் உடல் நேற்று மீட்கப்பட்டது.அங்கு அக்.,16ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு வீடுகள் காணாமல் போயின.latest tamil newsஅதில் ஷியாத் மனைவி பவுஷியா 28, மகன் அமீன்ஷியாத் 10, மகள் அம்னா 7, மற்றும் பைஷல் மகள் அப்ஷால் 8, மகன் அபியான் 4, ஷாஜி 55, ஷாகுல் மகன் சச்சுஷாகுல் 7, ஆன்சிபாபு 50, மாயமாகினர். அவர்களில் பவுஷியா, அமீன்ஷியாத், அம்னா, அப்ஷால், அபியான் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.சச்சுஷாகுல், ஆன்சிபாபுவை தேடும் பணி நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. தீயணைப்பு, வருவாய், போலீஸ், தேசிய பேரிடர் மீட்பு படை துறைகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் அதிகமானோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதில் சச்சுஷாகுலின் உடல் மீட்கப்பட்டது. ஆன்சிபாபுவை தேடும் பணி நடக்கிறது.


latest tamil news
பெட்டிமுடி பாணியில் தேடுதல் பணிமூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் 2020 ஆக., 6 இரவு ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பலியாயினர். அது போன்ற பேரிடர் காலங்களில் காணாமல் போனவர்களை தேடுவதற்கு என திருச்சூர் போலீஸ் அகாடமியில் இரண்டு மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அவை முதன்முறையாக பெட்டிமுடி விபத்தில் பயன்படுத்தப்பட்டன. அது போன்ற மோப்பநாய்களை கொண்டு கொக்கையாறில் மாயமானவர்களை தேடும் பணி நடந்தது. மூணாறில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்கு மூணாறு ஊராட்சியில் சமூக ஆர்வலர்களைக் கொண்ட அவசர கால மீட்பு குழு செயல்படுகிறது. அக்குழுவினர் பெட்டிமுடியில் அனைத்து நாட்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டு 26 உடல்களை மீட்க உதவினர்.அக்குழுவைச் சேர்ந்த செந்தில்குமார், ஷால்சன்ஜோஷி, சிஷூசாஜி, ைஷஜூசாஜி கொக்கையாறில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து சிறுவன் சச்சுஷாகுலின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.


latest tamil newslatest tamil newsசாவிலும் இணை பிரியாத பிஞ்சுகள்

கொக்கையாறில் நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் ஆன்சிபாபு தவிர மற்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பைஷலின் குழந்தைகள் அப்ஷால், அபியான் மற்றும் அவரது சகோதரி பவுஷியாவின் குழந்தைகள் அமீன்ஷியாத், அம்னா இணை பிரியாமல் இருப்பவர்கள். அவர்களில் அப்ஷால், அபியான், அம்னா கட்டிப்பிடித்தவாறு இறந்துள்ளனர்.கொக்கையாறில் கன மழை பெய்தபோது வீட்டின் வழியாக பாய்ந்த மழை நீரை இறுதியாக பவுஷியா அலைபேசியில் படம் பிடித்து தான் மரணமடையப் போகிறோம் என்பதை உணராமல் சிலருக்கு அனுப்பியுள்ளார். நிலச்சரிவுக்கு பின் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தை பார்த்து அமீன்ஷியாத்தும், அம்னாவும் அச்சத்துடன் நடுங்கி ஒடிங்கியுள்ளனர். அந்த காட்சி அலைபேசியில் பதிவாகியுள்ளது

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X