பொது செய்தி

தமிழ்நாடு

ஷீரடிக்கு குரு க்ருபா யாத்திரை; மதுரையில் இருந்து சிறப்பு ரயில்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : ஷீரடிக்கு குரு க்ருபா யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து டிச., 1ம் தேதி புறப்படும்.திண்டுக்கல், திருச்சி, அரியலுார், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை - எழும்பூர் வழியாக மஹாராஷ்டிரா மாநிலம் செல்லும். அங்கு ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கா, சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில்களுக்கு செல்லலாம். ஆந்திராவில்

சென்னை : ஷீரடிக்கு குரு க்ருபா யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து டிச., 1ம் தேதி புறப்படும்.latest tamil news


திண்டுக்கல், திருச்சி, அரியலுார், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை - எழும்பூர் வழியாக மஹாராஷ்டிரா மாநிலம் செல்லும். அங்கு ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கா, சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில்களுக்கு செல்லலாம். ஆந்திராவில் மந்த்ராலயம் சென்று வரலாம்.

ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 7,060 ரூபாய் கட்டணம். கொரோனா பாதிப்பின்றி சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளோடு, யாத்திரை ரயில் இயக்கப்படுவதால், பயணியர் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.


latest tamil news


மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டண சலுகை உண்டு.மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை அலுவலகத்தை 90031 40680, மதுரை 82879 31977, திருச்சி 82879 31974 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
19-அக்-202115:09:54 IST Report Abuse
Vijay D Ratnam மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு கட்டண சலுகை உண்டு. ஏன் அப்டியே ஃபைவ் ஸ்டார் ரூம் வசதியும் செய்து கொடுக்கலாமே. இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா. விவசாயிகளுக்கு, கூலி தொழிலாளர்களுக்கு கட்டண சலுகை உண்டு என்றால் ஒத்துக்கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் வணிகம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறு குறு வியாபாரிகளுக்கு கட்டண சலுகை உண்டு என்றால் ஒத்துக்கொள்ளலாம். தனியார் தொழில் நிறுவனங்களில் சொற்ப சம்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊழியர்களுக்கு கட்டண சலுகை உண்டு என்றால் ஒத்துக்கொள்ளலாம். கொரோனா குந்தாணி என்று எது வந்தாலும் வக்கணையா சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கட்டண சலுகை என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அரசு ஊழியர்கள் ஃப்ளைட்லேயே டிக்கட் எடுத்துக்கிட்டு போகலாம்.
Rate this:
Cancel
V Goplakrishnan - சென்னை,இந்தியா
19-அக்-202114:36:26 IST Report Abuse
V Goplakrishnan Don't tell as Govt. Servant. Tell as Partner in Tax Collection from Public. One agri labour is getting only Rs.500/- per day Whereas a Teacher is getting more than 70,000/- Per month. Both are same qualification. இதுதான் சமூக நீதியா
Rate this:
Cancel
V Goplakrishnan - சென்னை,இந்தியா
19-அக்-202114:30:26 IST Report Abuse
V Goplakrishnan அரசு ஊழியர் என சொல்லக்கூடாது. மக்கள் வரிப்பணததில் பங்குதாரர். அதாவது பொது மக்கள் இடம் இருந்து வசூலிக்கப்படும் வரியை பிரித்து எடுத்து கொள்பவர்கள். அவர்களுக்கு எதற்காக பென்ஷன் மற்றும் சலுகைகள். வசூலிக்கப்படும் வரியில் 90 சதம் பங்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. சம்பளம் மற்றும் பென்ஷன் என்று. வரி பங்கு எல்லா குடி மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். 5 வருடங்களில் பனி செய்தால் போதும். பென்ஷன் ஒழிக்கப்பட வேண்டும். 60 வயதை அடைந்த அனைத்து குடிமகன்கள் சமமாக பென்ஷன் பெறவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X