அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., சார்பில் போட்டியிட்ட 381 பேர் வெற்றி: அண்ணாமலை

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
சென்னை : ''ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.தமிழக பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில், நேற்று அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர்
BJP, Annamalai, Bharatiya Janata Party

சென்னை : ''ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., சார்பில், ஒன்பது மாவட்டங்களில் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில், நேற்று அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின், அண்ணாமலை அளித்த பேட்டி: பா.ஜ., பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமனை, எந்த அறிவிப்பும் இல்லாமல் போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கைது குறித்து கேட்க சென்ற, மகளிரணி நிர்வாகியையும், அவமரியாதையாக நடத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்படும்.


latest tamil news


ஆளும்கட்சியின் ஏவல் படையாக, காவல் துறை செயல்படக் கூடாது; தமிழகத்தில் சர்வாதிகாரம் தலைதுாக்கி இருப்பதற்கு, இதுவே உதாரணம்.பா.ஜ., மீதும், பிரதமர் மீதும் கடும் விமர்சனங்கள் செய்வோருக்கு எதிராக, காவல் துறை நடவடிக்கை எடுப்பதில்லை. காலங்கள் மாறும், காட்சிகள் மாறும். எனவே, கட்சிகளை தாண்டி, காவல் துறை நியாயமான முறையில் நடக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர்களில், 332 வார்டு உறுப்பினர்கள்; 41 பஞ்சாயத்து தலைவர்கள்; எட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம், 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நெருக்கடி நிலை என்று கூறி, ஒரு யூனிட் மின்சாரத்தை, 20 ரூபாய்க்கு வாங்குகின்றனர். இது, உற்பத்தி செலவை விட, நான்கு மடங்கு அதிகம். ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் உற்பத்தி நிலையத்தை வாங்கி, அதன் வாயிலாக, 5,000 கோடி ரூபாய்க்கு மின்சாரம் விற்க வாரியத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார்.

அமைச்சர்களுக்கு லாபத்தை ஈட்டுவதற்காக தான், இந்த ஒப்பந்தம் நடக்கிறது. ஏற்கனவே மின் வாரியம், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதை நிறுத்தாவிட்டால், ஒப்பந்த பேச்சு குறித்த ஆவணங்களை, பா.ஜ., வெளியிடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
23-அக்-202107:45:42 IST Report Abuse
rajan ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். - ஒரு வோட்டு காரரும் பிஜேபி சார்பில் போட்டியிட்டவரே என அண்ணாமலை தெரிவித்தார்
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
23-அக்-202103:26:16 IST Report Abuse
Venkatakrishnan நீ தலைவனாகிட்ட இல்ல...? அந்த 381 ம் எப்படி 0 ஆக்குகிறது என்று தமிழகம் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை ஆர்வக்கோளாறு ஆபீசர்...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-அக்-202121:26:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நண்பர் நாராயணன் முத்துவின் கலாய்ப்பு தான் உண்மை.. காஸ்மீரிலே போலீஸ் சுட்டவன் எல்லாம் தீவிரவாதி என்பது போல, தமிழ்நாட்டிலே ஜெயிச்ச சுயேட்சைகள் எல்லாம் பாஜகவினர். ஒத்த வோட்டு புகழ், மற்றும் இவரு கட்சியிலே மண்ணைக்கவ்வி தோத்தவன் எல்லாம் சுயேட்சைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X