பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.30 கோடி கமிஷன் பரிவர்த்தனை: விஜயபாஸ்கர் பி.ஏ., நிறுவன 'ரெய்டில்' கண்டுபிடிப்பு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பி.ஏ., நடத்திய ஆலோசனை நிறுவனத்துக்கு, ஒன்றரை ஆண்டில் 30 கோடி ரூபாய் கமிஷன், வங்கிகள் மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்டுஇருப்பதை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.நண்பர்கள் வீடுஅ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நேற்று லஞ்ச
Vijayabhaskar,விஜயபாஸ்கர்,கமிஷன், பரிவர்த்தனை, விஜயபாஸ்கர், பிஏ, ரெய்டு, கண்டுபிடிப்பு

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பி.ஏ., நடத்திய ஆலோசனை நிறுவனத்துக்கு, ஒன்றரை ஆண்டில் 30 கோடி ரூபாய் கமிஷன், வங்கிகள் மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்டுஇருப்பதை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.


நண்பர்கள் வீடுஅ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் 'ரெய்டு' நடத்தினர். விஜயபாஸ்கரிடம் உதவி யாளராக இருந்தவர்கள் கூட, பினாமி நிறுவனங்களை வைத்து கோடிகளில் சம்பாதித்திருப்பது இந்த ரெய்டில் தெரியவந்து உள்ளது.

அரசியல் பி.ஏ., சரவணன் நடத்திய நிறுவனத்துக்கு மட்டும், ஒன்றரை ஆண்டுகளில் கமிஷனாக 30 கோடி ரூபாய் வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. சரவணன் கடந்த 2019 ஜூன் 10 அன்று, 'செந்துாரன் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். அதில் இவரும், இவருடைய மனைவியும் இயக்குனர்களாக இருந்து உள்ளனர். அமைச்சரின் உதவியாளராக அரசு ஊதியம் பெறும் ஒருவர், தன் பெயரில் நிறுவனம் நடத்துவதே விதிமீறல் என்பதை மீறி இந்த நிறுவனம் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கான கட்டணமாக, பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news
latest tamil news
மக்கள் நீதி மய்யம்சுகாதாரத் துறைக்கு மருந்து, உபகரணங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., செலுத்திய விபரங்களைச் சேகரித்ததில், இந்த பரிவர்த்தனை பற்றிய தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ளனர்.கடந்த 2019 டிச., 31லிருந்து, 2021 மே 5 வரையிலுமான காலகட்டத்தில், மொத்தம் 98 வங்கிப் பரிவர்த்தனைகள் மூலமாக இந்த நிறுவனத்துக்கு 30 கோடியே 55 லட்சத்து 70 ஆயிரத்து 360 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சில நிறுவனங்கள் ஒரே நாளில் பல கோடி ரூபாயை, இந்த நிறுவனத்துக்குச் செலுத்தி உள்ளன.

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகரனின், 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனம் தான், அதிக பரிவர்த்தனைகளை செய்து பல கோடி ரூபாயை இந்த நிறுவனத்துக்குச் செலுத்தி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 451 கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனத்துக்கு 'ஆர்டர்' தரப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டி லேயே இந்த நிறுவனத்துக்கு 30 கோடி ரூபாய் கமிஷன் கிடைத்து உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு 1,200 கோடி ரூபாய்க்கு டெண்டர் இல்லாமலே பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.


பினாமி நிறுவனம்இதில் தான், விஜயபாஸ்கர், அவரது உதவியாளர்கள், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் அதிகாரிகள் என பலரும் பினாமி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுத்து கோடிக்கணக்கில் அள்ளி இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

சோதனை குறித்து விஜய பாஸ்கர் கூறுகையில், ''லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். என் வீட்டில் நகை, பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்,'' என்றார்.

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202122:39:21 IST Report Abuse
அப்புசாமி ஒன்றிய அரசு ப.சி யை நோண்டி நொங்கெடுத்துச்சே... இவிங்களை ஒண்ணுமே பண்ணலையே, ஏன்? கூட்டு வெச்சா ஒரு நாயம்... காங்கிரஸ் ஆளுன்னா ஒரு நியாயமா?
Rate this:
Cancel
Paramasivam Murugappan - Chennai,இந்தியா
19-அக்-202115:26:09 IST Report Abuse
Paramasivam Murugappan எல்லாம் சட்டப்படி தான் இருக்கு இதில் எங்கிருந்து வந்தது ஊழல்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
19-அக்-202114:40:48 IST Report Abuse
Narayanan DMK was not there for the past ten years, but spent nearly 1000 crores for the last election and won too? Any one asking as where was the money came in? paid to prashant Kishore, election commission and all alliance parties . That is great for DMK , because they are well trained to do in scientific method .
Rate this:
Suri - Chennai,இந்தியா
19-அக்-202115:45:15 IST Report Abuse
SuriKeep cribbing like a child. Look at who is talking? World's richest party, ruling the Union for the past two terms cannot even germinate a single seed on its own in this revolutionary soil. BJP's tactics is simple: National security and Sealed cover. This methodology is more than scientific....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X