பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவில் 1.83 லட்சம் பேருக்கு சிகிச்சை: 227 நாட்களுக்கு பின் குறைவு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் கோவிட் பாதித்து 1,83,118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை 227 நாட்களுக்கு பின்னர் மிகவும் குறைவானதாகும்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 13,058 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 19,470 பேர் நலமடைந்தனர். 164 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி : இந்தியாவில் கோவிட் பாதித்து 1,83,118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை 227 நாட்களுக்கு பின்னர் மிகவும் குறைவானதாகும்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 13,058 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 19,470 பேர் நலமடைந்தனர். 164 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ,40,94,473 ஆனது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,34,58-801 ஆகவும், உயிரிழப்பு 4,52,454 ஆகவும் உயர்ந்தது. தற்போது 1,83,118 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது 227 நாட்களுக்கு பின் குறைவாகும்.


latest tamil news



இந்தியாவில் இதுவரை 98,67,69,411 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இந்தியாவில் நேற்றைய பாதிப்பு மற்றும் மரணத்தில், கேரளாவில் 6,676 பேர் பாதிக்கப்பட்டனர். 60 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X