வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை!

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பியாங்யாங்: வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்ததுடன் கண்டனம் தெரிவித்துள்ளன.ஏவுகணை சோதனை குறித்து தென் கொரிய கூட்டுப்படைகள் தலைவர் கூறியதாவது: வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி இருக்கிறது. வட கொரியா அதனைப் பயன்படுத்தி தற்போது ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. நாங்கள்,
South Korea, Missile, Test, வடகொரியா, மீண்டும், ஏவுகணை சோதனை, தென்கொரியா, ஜப்பான், கண்டனம்

பியாங்யாங்: வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்ததுடன் கண்டனம் தெரிவித்துள்ளன.


latest tamil news


ஏவுகணை சோதனை குறித்து தென் கொரிய கூட்டுப்படைகள் தலைவர் கூறியதாவது: வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி இருக்கிறது. வட கொரியா அதனைப் பயன்படுத்தி தற்போது ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. நாங்கள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை கூர்ந்து கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கொரிய போர் முடிவுக்கு வந்தாலும் இன்னமும் இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான சூழ்நிலை ஏற்படாததால், தென் கொரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு இத்தகைய ஏவுகணை சோதனைகள் முட்டுக்கட்டையாக அமையும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடா தெரிவிக்கையில், "வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. வட கொரியா சமீப காலமாகவே அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.


latest tamil news


அண்மையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஏவுகணை சோதனைகள் பற்றி தெரிவிக்கையில், ‛‛வடகொரியா ராணுவ பலத்தை அதிகரிக்கவே விரும்புகிறது. போரை விரும்பவில்லை. நாங்கள் வலிமையாக இருக்க வேண்டும். நம் நாடு எதிர்கொள்ளும் ராணுவ அச்சுறுத்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை விட வித்தியாசமானதாக உள்ளது," என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-202117:04:09 IST Report Abuse
Vittalanand விட்டு விடுங்கள் செயதிகளை இருட்டடிப்பு செய்து வியுங்கள் தானே நிற்கும்.
Rate this:
Cancel
Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-202110:25:47 IST Report Abuse
Ramesh அவர்களுக்கும் தேவை பாதுகாப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X