பொது செய்தி

இந்தியா

நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் 11வது பி-8ஐ போர் விமானம் இந்தியா வருகை

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 11-வது பி-8ஐ போர் விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் மணி
Indian Navy, Receives, P8i Aircraft, 11th Boeing Aircraft, Boost, Anti Submarine, Operations, Indian Ocean Region, இந்தியா, கடற்படை, பி8ஐ, போர் விமானம், நீர்மூழ்கிக் கப்பல்

புதுடில்லி: நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 11-வது பி-8ஐ போர் விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் மணி நேரத்திற்கு மேலாக அந்தப் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்திய கடற்பகுதியை கண்காணிப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.


latest tamil news


அதையடுத்து, கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 9வது பி-8ஐ போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரிலும், 10வது போர் விமானம் கடந்த ஜூலை மாதமும் இந்தியாவுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது 11வது பி-8ஐ போர் விமானம் கோவா வந்தடைந்துள்ளது. இந்த தகவலை போயிங் நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

தற்போது இந்தியா வந்துள்ள இந்த விமானம் பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியக் கடற்படையை பலப்படுத்துவதற்கும், இந்திய பெருங்கடலில் வலிமையை நிலைநிறுத்துவதற்கும் இந்த விமானம் பயன்படும் எனக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
19-அக்-202117:55:45 IST Report Abuse
செல்வம் அப்போ காங்கிரசு எல்லார்கிட்டயும் காட்டியும் கொடுக்குமா 2009 ல அக்ரிமெண்ட் போட்டு கொடுத்தது காங்கிரஸ் தானே
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-அக்-202116:24:40 IST Report Abuse
sankaseshan காங்கிரஸ்காரன் எந்த அளவுக்கு நம் ராணுவத்தை பலவீனமாக வைத்திருந்தான் என்று தெரிகிறது இது நேரு காலத்தில் ஆரம்பித்தது சீனாவை வி ட நம் ராணுவம் பலவீனமாக இருக்கவேண்டும் எனறு செயல்பட்டார் இந்த அரசு ராணுவத்தை பலபடுத்தி வருகிறது
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
19-அக்-202115:18:07 IST Report Abuse
RandharGuy லக்னோ: போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், தற்போதைய பா.ஜ., எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரிவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Rate this:
visu - Pondicherry,இந்தியா
20-அக்-202106:21:18 IST Report Abuse
visuஇதற்கும் செய்திக்கும் என்ன சம்பந்தம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X