பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 10 அணைகளுக்கு அபாய எச்சரிக்கை: கரையோர பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்'

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அணைகளில் உபரி நீர் திறக்கப்படுகிறது; 10 அணைகளின் அருகில் உள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலையால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 27 பேர்

திருவனந்தபுரம்: கேரளாவில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அணைகளில் உபரி நீர் திறக்கப்படுகிறது; 10 அணைகளின் அருகில் உள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.latest tamil newsஅரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலையால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், மழை வெள்ள நிலவரம் குறித்து பத்தனம்திட்டாவில் ஆலோசனை கூட்டம் நடத்திய பின், மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா வர்கீஸ் மற்றும் மாநில நீர்வளத் துறை அமைச்சர் ரோஸி அகஸ்டீன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


latest tamil news
சபரிமலை செல்ல தடை


தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காக்கி அணை நிரம்பி வழிகிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காக்கி நதியின் இரு மதகுகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் பம்பை நதியில் நீரின் அளவு அபாய கட்டத்தைத் தாண்டும்.

இந்நிலையில், வரும் 20 - 24ம் தேதி வரை மிக பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க இயலாது.


சிவப்பு எச்சரிக்கை


பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ள காக்கி, சோலையாறு, மாட்டுப்பட்டி, மூழியாறு, குண்டாலா, பீச்சி உள்ளிட்ட 10 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


latest tamil newsஇடுக்கி அணையின் முழுக் கொள்ளளவு 2,403 அடியில் தற்போது, 2,396 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இன்று காலை அணை திறக்கப்படுகிறது. சோலையாறு, பம்பை, காக்கி, இடமலையாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தெற்கு மற்றும் மத்திய கேரளத்தில் உள்ள நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202119:21:23 IST Report Abuse
சம்பத் குமார் 1). கேரளா மக்கள் இந்த வெள்ள சேதங்களிலிருந்து விடுப்பட்டு மீண்டு வர தமிழக இந்திய மக்கள் சார்பாக வேண்டி கொள்கிறோம்.2). அதேசமயம் வெள்ளம் அதிகமாக செல்லும் ஆறுகளின் மீது அணை கட்டி Big Pipes மூலம் அந்த தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பிவிட லாம்.3). அதற்கு ஆகும் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாலாம்.முடிந்தால் உலக வங்கியிடம் இதற்கு நிதி உதவி பெறலாம். மத்திய அரசும் தேவையான உதவிகளை இதற்காக செய்ய வேண்டும்.4). ஆந்திராவின Guinness World record Polavaram Irrigation project நம் இந்தியர்களால் செய்து முடிக்கப்பட்டது என்றால் இதுவும் சாத்தியமே.இன்றைய டெக்னாலஜியில் இதை நம்மால் செய்து முடிக்க முடியும். தேவையானது இதை செய்ய வேண்டும் என்ற மனம் மட்டுமே. மற்றும் அரசியல்வாதிகளின் கையில் உள்ளது. இருமாநில மக்களும் இதனை கண்டிப்பாக வரவேற்பார்கள். நன்றி ஐயா. ஹரி ஓம்.
Rate this:
Cancel
P RAMESH KUMAR - balasore,இந்தியா
19-அக்-202112:04:38 IST Report Abuse
P RAMESH KUMAR தமிழ்நாட்டுல தண்ணி இல்லாம தவிக்கிறோம். இங்க தண்ணியால தவிக்கிறாங்க. இப்போவாவது நமது மலையாள சகோதரர்களுக்கு முல்லை பெரியாறிலுருந்து தண்ணி கொடுக்கணும்னு தோணுமா. தமிழன் சேத்துல கால வச்சத்தன் மலையாலேயே சோத்துல கைய வைக்க முடியும் இதை இப்போவாவது மலையாள நண்பர்கள் புருஞ்சுகிட்ட சரி
Rate this:
19-அக்-202117:01:33 IST Report Abuse
Vittalanandகன மழையால் பெரியாறு அணை உடையவில்லையே பிறகு 150 அடிக்கு நீர் மட்டம் உயர்தலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X